“எண்ட்கேம்”.. ஓமிக்ரான் பரவலோடு Corona Pandemic முடிவிற்கு வருகிறதா? நிபுணர்கள் சொல்லும் பின்னணி!

சென்னை: ஓமிக்ரான் பரவலோடு கொரோனா பெருந்தொற்று முடிந்துவிடும் என்று பலர் இணையத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதுதான் கடைசி வீரியமான உருமாறிய கொரோனாவாக இருக்கும்.. இதற்கு மேல் அலைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஓமிக்ரான் மூலம் கொரோனா பரவல் முடிவிற்கு வருமா.. இந்த பெருந்தொற்று இத்துடன் டாட்டா காட்டிவிட்டு மறைந்து போக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு பெருந்தொற்றும் கண்டிப்பாக ஒரு கட்டத்திற்கு பின் உச்சத்தை எட்டி முடிவிற்கு வரும். பிளேக், ஃப்ளூ தொடங்கி எல்லா பெருந்தொற்றும் இப்படி முடிவிற்கு வந்துள்ளது. அப்படிதான் கண்டிப்பாக கொரோனா பரவலும் முடிவிற்கு வரும். ஆனால் ஓமிக்ரான் இப்போது வேகமாக பரவி வரும் நிலையில்.. உண்மையில் கொரோனா பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.

அதிலும் சில நிபுணர்களோ கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள்.. அது எங்கேயும் போகாது என்று கூறி அச்சம் எழுப்பி உள்ளனர். கொரோனா இங்கேயே இருக்கும். மக்கள் அதற்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன

கருத்து

இந்த நிலையில் இந்த பேண்டமிக் முடிவிற்கு வருமா வராதா என்று சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல யேல் மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் டாக்டர் ஆல்பர்ட் கோ அளித்த பேட்டியில், இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் நமக்கு எல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. இதேபோல் புதிய வகை கொரோனா தோன்றும் வாய்ப்பு உள்ளது. அதற்கு முன் நாம் சித்தரிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.