இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்


கோத்ரா சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்குடன் இந்துத்துவ அமைப்புகள் இனப் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு பொய் செய்தியை பரப்புவதற்காக 3 நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தியாவில் அதிகரித்து வரும் இனப்படுகொலை வெறுப்பு பேச்சு மற்றும் அரசு ஒடுக்குமுறை குறித்து அக்கறை கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோர், நட்பு நாடுகள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் வாதிடும் குழுக்களின் கூட்டினால் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த அமைப்புகள் இனப்படுகொலையைத் தடுப்பதில் உறுதிபூண்டுள்ளன மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான சமூகங்களை உருவாக்குவதில் முன்முயற்சியுடன் கூடிய பொறுப்பைப் பெற முயல்கின்றன. என்ற அறிவிப்பு செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் 26 முதல் 28 வரை நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் மோடி எதிர்ப்பு என்பதை தவிர வேறு எந்த திட்டமும் கிடையாது.

இதில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் இருப்பவர்கள் கடந்த காலங்களில், இந்து எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு பிரசாத்தில் முதன்மை வகித்தவர்கள். இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் நிர்வாக இயக்குநரும், உச்சிமாநாட்டின் இணைத் தலைவருமான ரஷீத் அகமது கூறுகையில், “இந்த உச்சி மாநாடு அனைத்து இந்தியர்களுக்கும் அமைதி, பன்மைத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக்கான அவசர அழைப்பு. “மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவை அன்பு, இரக்கம் மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மையின் பகிரப்பட்ட நெறிமுறைகளின் ஊற்றுகளாக இருக்கும் ஒரு சிறந்த உலகத்திற்காக நாங்கள் ஏங்குகிறோம், வெறுப்பு மற்றும் வெகுஜன வன்முறை அல்ல,” என்று அகமது கூறினார்.

இந்த கருத்து இந்தியாவிற்கு மட்டுமா அல்லது வன்முறையை ஆயுதமாக கொண்டு செயல்படும் இஸ்லாமிய நாடுகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் மேற்படி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த கேள்வி எழுகிறது.

2022 பிப்ரவரி மாதம் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் இந்தியா ஆன் தி ப்ரிங்க் – பிரிவென்டிங் ஜெனோசைட் ( Inida.onthe.brink. Preventing Genocide ) என்ற தலைப்பில், காணெலி காட்சியாக ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மேற்படி மாநாட்டில், 2014க்கு பின்னால் முஸ்லீம்கள் இனப் படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை பரப்புவர்கள். அந்நிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தொண்டு காரியங்களுக்கு நிதி உதவி பெற்று, தனது சொந்த வாழ்க்கைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த பிரிவினைவாதிகள். இந்த மாநாட்டை நடத்தியவர்கள் அமெரிக்காவை முதன்மை தளமாக கொண்டு இஸ்லாமிய அமைப்புகள்.

மேற்படி மாநாட்டில் இந்தியாவிலிருந்து கவிதா கிருஷ்ணன், டிஸ்டா செடல்வாட், ரஷீத் அகமது போன்றவர்களும், பத்திரிக்கையாளர் ரக்கிப் ஹமீத் நாயக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் முஸ்லீம்களும், முஸ்லீம் ஆதரவாளர்களும். இந்த உச்சிமாநாட்டிற்கு 20 அமைப்புகள் ஏன் ஒன்றிணைகின்றன என்பதை அந்த செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியது, “இந்தப் பின்னணியில், உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர் அமைப்புகள் உலக அளவில் போற்றப்படும் மனித உரிமை அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து ‘இந்தியா விளிம்பில் – இனப்படுகொலையைத் தடுக்கும்’ என்ற தலைப்பில்’ 20க்கும் மேற்பட்ட அமைப்புகள், இந்து விரோத போக்கு கொண்ட உலகளாவிய CAIR போன்ற இந்து விரோத அமைப்புகளுடன் கூட்டணியால் இணைந்து நடத்தப்பட்டது.

மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் விவாதித்த தலைப்புகளிலிருந்தே இவர்களின் நோக்கம் நன்கு புரியும். 2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை நினைவூட்டும், நீதிக்கான போராட்டங்கள், குற்றவாளிகளின் துரோகம், அரசின் உடந்தை போன்றவற்றை விவாதிக்கும் என முதல் நாள் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியை பற்றி எந்த குறிப்பும் கிடையாது. மேலும் 2002-ல் நடந்த கலவரத்திற்கு மூல காரணமாக அமைந்தது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்பதை மறந்து விட்டு விவாதிப்பது ஏன் என்பது புரிந்து கொள்ள இயலும். இனப்படுகொலை நடக்கும் என எதிர்பார்த்து உலக அளவில் இந்தியாவின் மீது இனப்படுகொலை நடக்கும் என்ற மாயையை உருவாக்கும் நோக்கமே , நிகழ்ச்சி நடத்தியவர்களின் திட்டமாகும்..

27 பிப்ரவரி 2002 அன்று 59 பயணிகளை உயிருடன் எரித்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதிகமான இந்துக்களைக் கொல்ல இஸ்லாமிய கும்பல் திரும்பியபோது, உடனடியாக காவல் துறையினர் எடுத்த தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இந்து இன படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டது. இது பற்றிய கருத்துக்களை கூட தெரிவிக்கவில்லை. 6 டிசம்பர் 1992 அன்று, அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக 1993 மார்ச் 12 அன்று மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. மேற்படி குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி மக்களை பற்றியும், குண்டு வெடிப்பு நடத்திய முஸ்லீம் பயங்கரவாதிகளை பற்றியும் விவாதிக்க முன் வராத அமைப்பு தான் , இந்தியாவில் இன படுகொலை நடப்பதாக புலம்புகிறது.

மேற்படி மாநாட்டில் விவாதிக்கப்படும் மற்றொரு விஷயம், அசாமின் மறக்கப்பட்ட இனப்படுகொலை 1983 ஆம் ஆண்டு Nellie படுகொலையை மறுபரிசீலனை நடத்த வேண்டும் என்பது பற்றி விவாதிப்பது. ஹிஜாப் தடை, வெறுப்பு பேச்சு மற்றும் வேட்டையாடுதல்: குஜராத்தின் நீண்ட நிழலில் முஸ்லீம் பெண்களை குறிவைத்தல் 2002 மனிதாபிமானம் மற்றும் துருவப்படுத்தல்: இந்துத்துவா வெறுப்பு பேச்சு. போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. மேற்படி விவாதங்களில் பங்கு கொண்டவர்கள் பலர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த வன்முறையை கூட தற்போதைய அரசுடன் ஒப்பிட்டு பேசினார்கள்.

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்களை ஒப்பிட்டு, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் வழக்கறிஞர் கிரெக் கார்டன், “ துருவமுனைப்பு: இந்துத்துவா வெறுப்பு பேச்சு” என்ற குழுவில் பங்கேற்று, இனப்படுகொலைக்கான தூண்டுதலின் லென்ஸ் மூலம் வெறுப்பூட்டும் பேச்சுக்கு வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றார். “சமீபத்தில் இந்தியாவில் [இனப்படுகொலைக்கான] நேரடி அழைப்புகளை நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார். இது சர்வ தேச சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மூத்த மனித உரிமை வழக்கறிஞர் மீதாலி ஜெயின், மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் காணப்படுவதைப் போன்று “இனப்படுகொலை குணாம்சம் கொண்ட” இந்தியாவில் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்கள் குறித்து முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் கூறினார். சில தவறான தகவல்களின் அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டார் என்பதை மறந்து விட்டு மேற்படி கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை (CAA) இந்தியா சட்டமாக்கிய காலத்தில் பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான பார்வைகளுடன் வெறுப்பு நிறைந்த நூற்றுக்கணக்கான பதிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன, பேஸ்புக்கில் தவறான தகவல்கள், வேறு இடங்களில் நடந்த முஸ்லீம் தாக்குதல் புகைப்படங்களை வெளியிட்டு தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். டெல்லியில் வன்முறையில் உச்சக்கட்டத்தை அடைந்தது, இது பல இது முஸ்லீம் அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூண்டுதலால் உருவானது என்பதை கூட கவனிக்க மறந்து விட்டார்கள். . ஒரு முஸ்லீம் கவுன்சிலர் வீட்டின் மாடியலிருந்து பெட்ரோல் குண்டுகள், கற்கள் போன்றவற்றை குவித்து வைத்தார் என்பது கூட இவர்களுக்கு இட்டுக் கட்டிய பொய்யாகவே தெரிகிறது.

“உலகளாவிய இஸ்லாமோஃபோபியாவில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு குழுவில் பங்கேற்று, அமெரிக்காவின் ஜெய்துனா கல்லூரியின் இஸ்லாமிய சட்டப் பேராசிரியரான ஹடெம் பாஜியன், சீனா, இந்தியா, மியான்மர், பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இனப்படுகொலைகளை எதிர்கொள்கின்றனர் என்றார். . இஸ்லாமிய சட்ட பேராசிரியருக்கு சில சம்பவங்களை நினைவுப் படுத்த வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதையே ஏற்க மறுக்கும் இவர்களின் பார்வையில் இந்தியா பற்றிய பார்வையும் மாறுப்பட்டதாகவே அமையும். சீனாவில் உய்கார் முஸ்லீம்கள் மீது நடத்திய இனப் படுகொலை சம்பந்தமாக மேற்படி அமைப்புகள் ஏன் உச்சி மாநாடு நடத்தவில்லை என்பதற்குறிய காரணங்கள் கொடுக்கவில்லை என்பதையும் இந்நேரத்தில் நினைவுப்படுத்த வேண்டும்.

1983 ஆம் ஆண்டு Nellie படுகொலையின் மூலம் யார் என்பதை கூட தெரிவிக்க மறுத்த இந்த அமைப்பினர், இது பற்றி மீன்டும் விசாரனையை நடத்த வேண்டும் என்கிறார்கள். லட்சக்கணக்கான பங்களா தேஷ் நாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவியதற்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் தான் மோடி அரசை குறை கூறும் அறிவுஜீவிகள். இந்திய இராணுவத்தை “காஷ்மீர் இனப்படுகொலையாளர்” என்று அழைப்பது தனது அடிப்படை உரிமை என்று நம்பும் ஜேஎன்யு மாணவர் CFI இன் தேசியத் தலைவர் சாஜித் பின் சயீத்தை முன்னிலைப்படுத்திய இந்த அமைப்பினர் , 1989-ல் பாகல்பூரில் சமஸ்கிருத கல்லூரிக்குள் 33க்கும் மேற்பட்ட மாணவர்களை கொன்ற சம்பவத்தைப் பற்றி விவாதிக்கவில்லை.

1998-ல் லூதியானாவில் இரு முறை 100க்கும் மேற்பட்ட இந்துக்களை கொன்று குவித்த சம்பவம் பிரபல பத்திரிக்கையாளர்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஹரித்துவாரில் ஒரு இந்து சன்னியாசி பேசியதை மட்டும் முன்னிலைப்படுத்தி, இந்தியாவில் இன படுகொலை நடக்கும் என மாநாடு நடத்துபவர்கள், தவ்ஹீத் ஜமாத் தலைவர் P.Jainulabdeen, There are only 20,000 policeman in the state, whereas his organization had 50 lakhs activities ready to do anything என கூறியது இவர்களின் கண்களில் படவில்லை. ஏ.ஐ.எம்.ஐ.எம். சட்ட மன்ற உறுப்பினர் அக்பரூதின் ஒவைசி, Remove Police for 15 minutes , we could finish off 100 cores hindus. என பல நேரங்களில் பொது மேடைகளில் பேசியது இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தாக கூறியது மாநாட்டு பொறுப்பாளர்களின் கண்களுக்கு தெரியாது.

மாநாடு அமைப்பாளர்களுக்கு முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டம் பற்றிய கருத்தரங்குகள் நடத்த முன் வருவதில்லை. ஏன் என்றால் மேற்படி மாநாடு நடத்தும் அமைப்புகளும் சரி அல்லது அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் முஸ்லீம்களாகவும், பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாளராகவும் உள்ளவர்கள். இவர்களின் பார்வையில் பல முஸ்லீம் நாடுகளில் ஷியா பிரிவினருக்கும் சன்னி பிரிவினருக்கும் நடக்கும் சண்டையில் நிகழும் இனப்படுகொலையைப் பற்றிய விவரங்களை கூட தெரிவிக்க மாட்டார்கள்.

மேற்படி மாநாட்டு பொறுப்பாளர்களின் பார்வையில் மறைந்த சில சம்பவங்களை குறிப்பிட வேண்டும் 1998-ல் சர்வதேச அளவில் 57 நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் நடத்திய தாக்குதல்களில் 9098 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 16, 926 பேர்கள் காயமடைந்தார்கள். 2009-ல் 40 நாடுகளில் 2131 தாக்குதல்களும், இத் தாக்குதல்களில் 9172 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 18612 பேர்கள் படுகாயமடைந்தார்கள். 2019-ல் 54 நாடுகளில் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் 1763, இதில் 10524 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 10725 பேர்கள் படுகாயமடைந்தார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் நீண்டு கொண்டே போகிறது. 2022 பிப்ரவரி மாதம் மட்டும் 20 நாடுகளில் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல்களில் 369 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

இம்மாதிரி தாக்குதல்களால் பாதிக்கப்படும் நாடுகள் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், சிரியா , நைஜீரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் என்பதும், இந்த நாடுகளில் நடக்கும் இனப்படுகொலையை பற்றிய ஆய்வும் அல்லது கருத்தரங்கமும் நடத்தப்படுவதில்லை. ஏன் இந்தியாவை மட்டும் குறி வைத்து தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

தங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்ற நினைவில் வாழ்கின்ற அந்நிய நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து மோடியின் ஆட்சி மீது வன்மத்தை புகுத்தும் ஈன செயல்கள் அறவே நிறுத்தப்பட வேண்டும்.

Source link

Leave a Reply

Your email address will not be published.