உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா-  தி.மு.க.வினால்  செய்ய இயலுமா?


உள்ளாட்சி தேர்தலுக்கு  முன்பே, தமிழக முதல்வர்   உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்  என கூறினார்.   நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி வாகை சூடிய தி.மு.க.  நல்லாட்சி வழங்க முடியுமா  என்ற கேள்வி சத்தியவான்களிடம் எழுகிறது.  இந்த கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணமே,  உள்ளாட்சியில்,  தி,மு.க.வின்  திருமங்கலம்  பார்முலா விளையாடியது.    தி.மு.க. வேட்பாளர்கள்  தேர்தலுக்கு செய்த செலவு  மாநகராட்சியில்  ஒரு வார்டுக்கு சுமார்   ஒரு கோடி வரையும்,  நகராட்சிகளில்  ஐம்பது லட்சம் வரையும் செலவு செய்துள்ளதாக  பரவலாகவும் நம்பகதன்மை கொண்ட செய்திகளும் வெளி வந்துள்ளன.  இந்த தேர்தல்  ஜனநாயகத்துக்கும்  பணநாயகத்துக்கும்  ஏற்பட்ட மோதல்  என்றால் மிகையாகாது.

                நடந்து முடிந்த  மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின்  தேர்தல்களில் ,  எதிர்பார்த்தது போலவே  ஆளும்  தி.மு.க.வின் அராஜக போக்கினாலும்,  ஜனநாயக விரோத செயல்களினாலும்  வெற்றி வாகை சூடியுள்ளது.   இந்த தேர்தலில்  ஜனநாயகம் வென்றது என்பதை விட பணநாயகம்  வெற்றி பெற்றுள்ளது  என கூறுவதே  சரியாக இருக்கும்.  தி.மு.க..விற்கு இது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே 2009ல் நடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக சுருட்டியது திமுக. அதனால்தான் அந்த தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தது திமுக. அதிலிருந்துதான் பெரிய அளவிலான வெற்றி பெற வேண்டும் என்றால், திருமங்கலம் ஃபார்முலாவை வைத்து வென்று விடலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  அதையே தான் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்றியது.   வெற்றி பெற்ற  ஆளும் கட்சியின் ஒரு மாமன்ற உறுப்பினர்  சுமார்   80 லட்சம் ரூபாய் செலவழித்தாக  கூறப்படுகிறது.   இவ்வளவு  தொகை செலவு செய்து வெற்றி பெற்ற உறுப்பினர்,  அரசாங்க நிதியில் எவ்வளவு கொள்ளையடிப்பார் என்பதையும் சற்றே சிந்திக்க வேண்டும்

                தி.மு.க.வின் கடமை , கண்ணியம், கட்டுப்பாடு  என்ற கொள்கைள்   திருவாளர்   அண்ணாதுரை சமாதியானவுடன்,  கொள்கையும்  சமாதியடைந்து விட்டது.   தற்போது கடமை என்பது  மாவட்ட செயலாளர்களை முறையுடன் கவனித்தால், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்  என்ற கடமை உணர்ச்சியுடன்,   கௌன்சிலர் பதவிக்கு நிற்பதற்கே, அரை கோடி முதல் ஒரு கோடி வரை  செலவு செய்தது போக,  சீட் பெறுவதற்கு மாவட்ட செயலாளருக்கு பணத்தை கப்பம் கட்டுவதிலிருந்து  ஊழல் தொடங்கி விட்டது.   இந்த லட்சணத்தில்  உள்ளாட்சியில் நல்லாட்சி எப்படி மலரும்.

                தமிழக முதல்வர் தேர்தல் நடப்பதற்கு முன்பே , அனைத்து மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.  தி.மு.க.வின் வேண்டுகோள் விடுத்தால் ,  அதன் உண்மை என்ன என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்.   சாம, தான, பேத, தண்டம்  என கூறுவது போல்,  இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முதன்மையான நோக்கமாகும்.  முந்தைய தேர்தல்களில்  பண பட்டுவாடா என்பது  தேர்தலுக்கு முதல் நாள் நடக்கும் சம்பவம்.   இது கூட பலருக்கும் தெரியாமல் நடக்கும்.   ஆனால்  தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில்  வாக்காளருக்கு பணம் பட்டுவாடா என்பது காவல் துறையினருக்கு நன்கு  தெரிந்தே வாக்களருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

                மாநிலத்தில் சில இடங்களில் தேர்தலுக்கு முதல் நாள் , பணம் மற்றும் பொருட்களுடன் வினியோகம் தொடங்கியது.  இதில் வேடிக்கை என்னவென்றால்,  தி.மு.க.வினர்  வீடுகள் தோறும் சென்று,  சத்துாசி போட்டாச்சா  என்று கேள்வியை முன் வைத்துள்ளார்கள்.   இதன் உண்மையான பொருள், கொரானாவிற்கு ஊசி போட்டாச்சா என்பதல்ல,  ஓட்டுக்கு பணம் வந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்வதற்கு பயன்படுத்திய  சந்தேக மொழியாகும். 

                வாக்கு ரூ 1000 முதல் ரூ 2000 வரை தி.மு.க.வினர் வழங்கியுள்ளார்கள்.  மாநகராட்சியில்  ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 8,000 முதல் 9,000 வாக்காளர்கள்  உள்ளனர்.   இதில் கறைந்த பட்சம் 75 சதவீத வாக்காளருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.   ஆகவே  தி.மு.க. வேட்பாளர்கள் ஒரு மாநகராட்சி வார்டுக்கு செலவு செய்த தொகை ரூ50 லட்சத்திற்கு  மேலாக செலவு செய்ததாக கூறப்படுகிறது.  இத்துடன் பல இடங்களில்  பணத்துடன் சேலை, குடம் , சிறிய குத்துவிளக்கு போன்ற பொருட்களும் வழங்கியுள்ளார்கள்.   ஆகவே  உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் என்பதை விட பணநாயகம் முக்கிய பங்கு வகித்துள்ளது.   இந்த போக்கு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழி வகுக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

                     கோவையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தி.மு.க. நடத்திய பணநாயம் எப்படிப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.  ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டுக்கு  திமுக ஒரு கோடி ரூபாய் இறக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி கொலுசு, வெள்ளி காமாட்சி விளக்கு, சேலை, ஹாட் பாக்ஸ் இன்னபிற பரிசுப்பொருட்கள் வழங்கியிருக்கின்றன.   ஆயிரம் ரூபாயும், செல்வாக்கான நபர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டுகளில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள்.   மேயர் வேட்பாளர் களமிறங்கிய வார்டில் ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 4 ஓட்டுக்கள் உள்ளவர்கள், 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர். சிலர் ஊட்டி, கேரளா என்று டூர் போய்விட்டார்கள். அந்த ஒரு வார்டில் மட்டுமே 75 கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்துள்ளனர். 

                இந்த தேர்தலில் தி.மு.க.வினர் ஒரு புதிய வகையான வழி முறைகளை கொண்டு வந்துள்ளார்கள்.  தேர்தல் பணியில் ஈடுபடும் மாஜி ராணுவத்தினர்,  அரசுத்துறை ஒய்வு அதிகாரிகள், ஊர்காவல் படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.  இவர்களும்  தங்களின் வாக்குகளை தபால் மூலம் வாக்களித்தார்கள்.   நடைபெற்ற உள்ள உள்ளாட்சி தேர்தலில்,  தபால் ஓட்டு போடும் மேற்கூறிய பிரிவினரையும்  தி.மு.க.வினர் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.   இவர்களில் 25 சதவீதத்தினரை பணம், பொருட்கள், பணி மாற்றம் பெற்று தருவாதாக ஆசை வார்த்தை கூறி தங்களுக்கு சாதமாக வாக்களிக்க வைத்தார்கள்.  தபால் ஓட்டு போட ஓட்டு எண்ணிக்கை துவங்கும் பிப்ரவரி 19 காலை 7.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.  இது கூட தி.முக.வினரின் திட்டமிட்ட செயலாகும்.   அதாவது பிப்ரவரி 19-ந் தேதி இரவு ஓட்டுப் பதிவு சதவீதம் குறைந்து விடும் என்றும்,   வெற்றி வித்தியாசம் குறைந்த அளவில்  இருக்கும்  என உளவு துறை கூறியதால்,  தி,மு.க.வின் திட்டப்படி  தபால் ஓட்டு போடும் கால அவகசாம் ஓட்டு எண்ணும் நாள் 22-ந் தேதி காலை வரை நீடிக்கப்பட்டது.   இந்த இடைவெளியில் தி.மு.க.வின் திட்டப்படி கவனிக்கப்பட்டது.   இதே போல் வாக்கு பதிவு நாளன்று, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு,  மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.   இந்த இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன என்பதை கவனித்தால்,  தி.மு.க.வின்  தில்லு முல்லு நன்றாக தெரியும்.   இதுதான் தி.மு.க.வினரில்  ஜனநாயகமாகவும்.   

                இதனிடையே,  அமைச்சர் துரைமுருகன் வாணியம்பாடி வாக்கு சேகரிக்கும் போது, எச்சரிக்கை செய்யும் விதமாக பேசியதும், வாக்களார்களை மிரட்டியது போல் இருந்தது.   வாணியம்பாடி மக்களுக்கு குறிப்பாக வாணியம்பாடி நகரத்தில் பரவலாக இருக்கும் மக்களுக்கு, எச்சரிக்கையாக ஒன்றை கூறுகிறேன்.  தமிழக அரசின் திட்டங்கள் அனைத்துகம், உங்களை முழுமையாக சென்று சேர வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் விருப்பம்.  அரசு திட்டங்கள் உங்களை வந்தடைய வேண்டும் என்றால், நல்ல கவுன்சிலர்களும், நல்ல தலைவரும் தேவை.  தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், திட்டங்கள் மிக  எளிதாக உங்களை வந்து சேரும், வணியம்பாடி சிறக்கும்.  என பேசியது  வாக்காளர்களை மிரட்டியது போல்  என்பதை மறந்து விட்டார்கள்.   இது பற்றி ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. கடைசி கட்டத்தில்,  குடும்ப தலைவிக்கு மாதம் ஊக்க தொகையாக ரூ1,000 மாதந்தோறும் வழங்கப்படும்  என சட்ட மன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை காப்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை மறைக்க கையாண்ட விதம் மோசமான ஒன்றாகும்.   போலியாக ஒரு விண்ணப்பத்தை  தயாரித்து,  விநியோகப்பட்டு,  வக்காளர்களை கவரும்விதமாக  செயல்பட்டது  ஜனநாயக நெறிமுறையாக  என்பதை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்.  ஏன்என்றால்,  அப்படிப்பட்ட விண்ணப்பம் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை என்பதை கூட கூறவில்லை என்பதையும் சிந்தித்தால்,  இது அப்பட்டமான பணநாயமும், மோசடித்தனமான செயல்பாடாகும்.   ஆகவே  தி.மு.க.வின் பெற்ற வெற்றி பணநாயகம் மற்றும்  குள்ளநரி செயலாகும்.

Source link

Leave a Reply

Your email address will not be published.