காஷ்மீரில் இஸ்லாமிய ஜிஹாத் கொலைவெறித்தனத்தின் வரலாறு, பிரத்யட்ச உண்மைகள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை முன்வைத்துஒத்திசைவு ராமசாமி அவர்கள் எழுதியுள்ள முக்கியமான பதிவு இது. ஆங்கிலத்தில் ஓரளவு பரவலாகவே வாசிக்கக் கிடைக்கும் இந்த விவரங்களைத் தமிழில் தொகுத்தளித்துள்ள ஒ.ரா. அவர்களுக்கு நன்றி. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வரலாற்று உண்மைத் தன்மை மற்றும் பின்னணி குறித்து அறிய விரும்புபவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய பதிவு.

பதிவின் சுட்டி இங்கே.

பதிவிலிருந்து:

“ஆவணபூர்வமாகவே இது ஏழாம் துரத்தியடித்தல்/’புலம் பெயர்தல்’ – பலர் நினைப்பது போல இது திடுதிப்பென்று 1990ல் ஏற்படவில்லை; கடந்த பல நூற்றாண்டுகளாகவே (அயோக்கிய ‘மெய்ஞான’ ஸூஃபிகள், அல்லாஹ் சுழி போட்டு ஆரம்பித்த அட்டூழியமிது!) இது தொடர்ச்சியாகச் செவ்வனே நடந்து வருகிறது. துரத்தியடிக்கப் பட்டவர்கள் – சுமார் 4-7 லட்சம் பண்டிட்டுகள் – பல காத்திரமான கணக்கெடுப்புகளின் படி, இது சுமார் 6 லட்சத்தில் இருக்கிறது. அதாவது ஆறு லட்சம் சோகக் கதைகள். படத்தில் நான்கு குடும்ப நிகழ்வுகளின் சோகங்களைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்..

பல கொடூரங்கள் நடந்தேறின: முஸ்லீம் பக்கத்து வீட்டுக் காரர்களால், சுட்டப்பட்டு – ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட பண்டிட்டுகள். அபயம் கொடுக்கிறேன் எனச் சொல்லி ஏமாற்றப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பண்டிட்டுகள். அபகரிக்கப்பட்டு மதமாற்றம் செய்து சீரழிக்கப்பட்ட பண்டிட் இளம்பெண்கள். தகப்பனுக்கும் தாய்க்கும் எதிரில் அவர்களுடைய பெண்குழந்தைகள் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணரப்பட்டது. கணவனுக்கு எதிரில் கும்பல்கும்பலாக மனைவி கற்பழிக்கப் படுவது; அச்சமயம், அவன் கண்ணை மூடவிடாமல் செய்வது. மனைவிக்கு எதிரில் கணவனைச் சித்திரவதை செய்து கொல்வது. ஹலால் வகையில் அல்லாஹூஅக்பர் (‘அல்லாஹ் தான் முதன்மையானவர்’) கூக்குரலுடன் கழுத்தை அறுத்தல்…

பெருமளவில் இந்த அட்டூழியங்களில் முஸ்லீம் சிறுவர்களும், பெண்மணிகளும் ஈடுபட்டது.

.. தொடரத் தொடர வேதனை மிகும்; இவை அனைத்துக்கும் அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் இந்த அட்டூழியங்கள் தொடர்பாக, ஒரு விஷயம் கூட ஊதிப் பெருக்கப் படவில்லை; மாறாக பலப்பலபல விஷயங்கள் குறைத்தே காட்டப்பட்டுள்ளன. டயலாக், ஓயாத பேச்சுகள்/உரையாடல்கள், மேடைப்பேச்சு இவற்றைத் தவிர அனைத்து விஷயங்களும் நடந்தவைகளின் நீர்க்கடிக்கப்பட்ட சோகங்கள்தாம்… “

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Source link

Leave a Reply

Your email address will not be published.