தி காஷ்மீர் ஃபைல்ஸ்: உள்ளத்தை உலுக்கும் உண்மை


“உள்ளம் என்பது ஆமை – அதில் உண்மை என்பது ஊமை” – கண்ணதாசன்

புலம்பெயர்ந்த காஷ்மீர பிராமணனான “கிருஷ்ணா பண்டிட்” JNU ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சி மாணவன். மாணவர் தலைமைக்கான தேர்தலில் போட்டியிட விரும்புகிறான். முப்பது வருடத்துக்கு முந்தைய அவன் வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் நடந்த அவன் அறிந்திராத சம்பவங்களும் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடப்பு நிகழ்வுகளும் தான் காஷ்மீர் கோப்புகள் Kashmir Files திரைப்படம். இரு கால சம்பவங்களும் மாற்றிமாற்றிப் பின்னப்பட்டு non -linear விதமாக திரைக்கதை காண்பிக்கப்படுகிறது.

இப்போது 33 வருடம் பின்னோக்கி செல்வோம். உங்களுக்கு “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி. காஷ்மீரில் வைஷ்ணோதேவி கோவிலில் இன்று நடைபெற்ற திருமண வைபவத்தில் புகுந்த தீவிரவாதிகள், மணமக்கள் உட்பட 63 பேரைச் சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கர் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்” நினைவு வருகிறதா? அதே காலம்தான். அதே இடம்தான். அதே கதைமாந்தர்கள் தான். மாணவன் கிருஷ்ணா அப்போது கைக்குழந்தை. அவன் தாத்தா புஷ்கர்நாத் பண்டிட் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். புஷ்கர்நாத்தின் மருமகனும், மகளும், பேரன் சிவா, கைக்குழந்தை கிருஷ்ணா ஆகியோர் மற்றும் சுற்றமும், நட்புமே கதை மாந்தர். இனி கதைக்குப் போவோம்.

புராண நாடக ஒத்திகைக்காக, சிவபெருமான் வேடமாக அரிதாரம் பூசிக்கொண்டு தயாராகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் புஷ்கர் நாத். அந்த நேரத்தில் வீட்டில் அவர் மகன் பக்கத்து வீட்டு பணக்கார இஸ்லாமிய சகோதரரிடம் “அண்ணா, நிலைமை சரியில்லையாமே?” என்று விசாரிக்க, அதற்கு இஸ்லாமிய சகோதரர் “பயப்பட ஒன்றுமில்லை, ஒருவாரம் இங்கே இருப்பதைத் தவிர்த்து வேறெங்காவது சென்று தங்கிக்கொள்ளுங்கள் . பிறகு பிரச்னைகள் குறைந்தவுடன் வரலாம்” என்று சொல்கிறார். யாசின் மாலிக்கின் தலைமையில் பயங்கரவாத முஸ்லீம்கள் துப்பாக்கியோடு வந்து கதவைத் தட்டுகின்றனர். கணவனை அரிசித் தாழிக்குள் ஒளிந்துகொள்ள வைத்துவிட்டு கைக்குழந்தையோடு சென்று கதவைத் திறக்கிறாள். கொல்ல வந்த இலக்கைக் காண முடியாத பயங்கரவாதிகளிடம் ஒளிந்துள்ள இட த்தை சமிக்ஞை செய்கிறார் பக்கததுக்கு வீட்டு இஸ்லாமிய சகோதரர் . அவருக்கும் ஆசையிருக்காதா, பணம் உள்ள நமக்கு ஆப்பிள் மாதிரி இன்னொரு மனைவி கிடைக்க வேண்டும், சொத்தும் இரட்டிப்பாக வேண்டும் என்று? அரிசித்தாழியில் துப்பாக்கி ரவைகள் துளையிடுகின்றன. வீட்டுக்குள் நுழைகிறார் புஷ்கர்நாத் பண்டிட். “அடப்பாவி, என் மகனைச் சுட்டுவிட்டாயா? என் மாணவன் என்பதை நீ மறந்துவிட்டாயா, நான் உன் வாத்தியார், புஷ்கர்நாத் பண்டிட்” . யாசின் மாலிக் பதில் சொல்கிறான்: “அதனால்தான் உன்னை உயிரோடு விடுகிறேன். உன் பேரன் கிருஷ்ணாவை உயிரோடு விடவேண்டுமென்றால், உன் மருமகளை இந்த ரத்த அரிசியை தின்னச் சொல்” … முப்பது வருடத்துக்குப் பின் கிருஷ்ணா JNU தேர்தலில் போட்டியிட தயராகிக் கொண்டிருக்கிறான்.

பெரிய பொட்டுடன் வேஷமிட்டிருக்கும் பெண் பேராசிரியர் (அருந்ததி ராய்?) தேசப்பிரிவினை பேசுகிறார். “மாணவர்களே சிந்தியுங்கள்..காஷ்மீர பிராமணர்கள் பணக்காரர்களாக இருந்துகொண்டு முஸ்லீமகளை ஏமாற்றினார்கள். உணவில்லாத ஏழை முஸ்லீம்களை அடிமைப்படுத்தி, அவர்களின் குழந்தைகளையும் இந்திய ராணுவம் பிடித்துக்கொண்டு போனால், முஸ்லீம்கள் சும்மாவா இருப்பார்கள்? அவர்களும் மனிதர்கள்தானே, அதனால்தான் தங்கள் இயலாமையை காஷ்மீர பண்டிதர்கள் மேல் திருப்பிவிட்டார்கள்”. “கிருஷ்ணா ‘பண்டிட்’? உன்னால் உயர்சாதிப் பெருமையை விட்டு இதரரை சமமாக பாவிக்க முடியாதில்லையா? ‘முடியும்’ என்றால் ‘விடுதலை’ என்று முழக்கமிடு பார்க்கலாம்?” என்கிறார். கிருஷ்ணா சங்கடத்துடன் “விடுதலை வேண்டும்” என முழங்குகிறான். “நான் உன்னை நம்புகிறேன் கிருஷ்ணா. நாளைக்குப் பத்திரிகையில் ‘காஷ்மீர பிராமணன் கிருஷ்ணா பண்டிட் , இந்தியாவில் இருந்து விடுதலை வேண்டும் என முழக்கம்’ என்பது வெளியாகும் என்கிறார்.

கிருஷ்ணா வீடு திரும்புகிறான். தன் தாத்தா புஷ்கர்நாத்திடம் முஸ்லீம்களின் அவலநிலையையும், எழுச்சியின் நியாயத்தையும் சொல்லி வாதாடுகிறான். புஷ்கர்நாத் இத்தனை நாளாக அவனிடம் அவன் பெற்றோரும் அண்ணனும் சாலை விபத்தில் இறந்ததாக சொல்லி மறைத்து வந்திருக்கிறார். உண்மையை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அவர் மனம் பிறழ்கிறது . சில நாட்களில இறக்கிறார். அவர் அஸ்தியை அவர் விருப்படி கரைக்க அவரின் பூர்விக வீட்டுக்கே செல்ல தயாராகிறான். எந்த வீட்டில் அவன் தந்தை சுட்டுகொல்லப் பட்டாரோ அதே வீடு. “கிருஷ்ணா, தேர்தல் முக்கியம் போகாதே, நம் விடுதலையின் நம்பிக்கை நட்சத்திரம் நீ” என்கிறார் தேசப்பிரிவினை பேராசிரியர். “சரி போய்த்தான் தீருவாய் என்றால், என் நண்பரான காந்தியவாதியும், விடுதலை போராட்ட வீரருமான யாசின் மாலிக்கிடம் சொல்கிறேன் அவர் உன்னைக் கவனித்துக்கொள்வார்”.

காலமானதை அறிந்த புஷ்கர்நாத்தின் நெருங்கிய நண்பர்கள் – காஷ்மீரில் அரசுப்பதவியில் இருந்தவர்கள் – நால்வர் சந்திக்கிறார்கள். பூர்விக வீட்டின் அடையாளம் தெரியுமாகையால் அவர்கள் கிருஷ்ணாவை அழைத்துக்கொண்டு புஷ்கர்நாத்தின் வீட்டுக்கு செல்லத் தயாராகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அரசுப்பணியில் அதிகாரியாகவும், போலீஸ் கமிஷ்னராகவும், டாக்டராவும் இருந்ததால் அவர்களுக்கு கிருஷ்ணாவின் தாத்தாவும், அம்மாவும், அண்ணன் சிவாவும் ஜம்முவில் தேளும், பாம்பும் கொண்ட கூடாரங்களில் வசித்ததையும், வெறும் 600 ரூபாய் பணத்தை அரசு அவர்களுக்கு கொடுத்ததில், மருந்து, உணவு வாங்க முடியாமல், உடல் நலம் குன்றி நடைப்பிணமாக வாழ்ந்த பாதிபேர் கூடாரத்திலேயே மடிந்ததையும் நன்கறிந்தவர்கள். கிருஷ்ணாவிடம் எந்த உண்மையையும் சொல்லாமல் ஊமை மாதிரி இருக்க வேண்டும் என ஒப்பந்தம். failure of collective conscience – அவர்களை துளைத்து எடுக்கிறது. மது கொடுத்த தெம்பில் நினைவில் இருந்து இறக்கி வைக்கிறார்கள்.அகதியான ஹிந்துக்களுக்கு 500 ரூபாய் தரும் அரசு அதே நேரத்தில் காஷ்மீர பயங்கரவாதிகளை சாந்திப் படுத்த பணத்தை இறைத்து செலவு செய்கிறது.

வாசகர்களுக்கு நினைவிருக்கலாம், யாசர் அரபாத் தின் மிகப்பெரிய நம்பிக்கையாக ராஜீவ் காந்தி திகழ்ந்தார். ராஜீவ் காந்தி, பரூக் அப்துல்லா, முப்தி முகமத் ஸையித் எல்லோரும் பாலஸ்தீன அகதிகளுக்காக உருகினார்களேயன்றி ஹிந்து அகதிகளுக்காக இல்லை. அகதிமுகாம் அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு சொந்த நாட்டில் அகதியான சிவா (கிருஷ்ணாவின் அண்ணண் ) செல்கிறான். அங்கும் தொப்புள்கொடி உறவான மௌல்வி ஆசிரியர்கள் மதம் மாறவில்லை என்றால் கொல்லவேண்டும், “”ஹிந்துக்களே அமைதி மார்க்கத்துக்கு மாறுங்கள்; இல்லையேல் உங்கள் பெண்களையும், சொத்துக்களையும் எங்களுக்கு விட்டுச்செல்லுங்கள்; அல்லது சாகுங்கள்”” என்று இளம் சிறார்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். விசாரிக்க செல்லும் கிருஷ்ணாவின் அன்னையை “உன் மகனுக்கு ஆபத்து வராமல் இருக்க என்னை மணந்துகொள் ” என்று கூசாமல் கேட்கிறார் அந்த இஸ்லாமிய சகோதரரான ஆசிரியர். பேராசை நிராசையான ஆத்திரத்தில் பயங்கரவாதிகளை ராணுவம் இல்லாத தருணத்தில் வரவழைக்கிறார் அந்தத் தொப்புள் கொடி உறவு.

பலவருடங்கள் கழித்து மன்மோகன் சிங் ஆட்சியில் டிவி ஸ்டேஷனுக்கு பேட்டியளிக்கும் யாசின் மாலிக் “ஒரு முப்பது பேரைக் கொன்றிருப்பேன்” எனச் சொல்கிறான். மன்மோகன் சிங்குடன் விருந்தில் கலந்துகொள்கிறான்.

இப்படியாக அவர்களின் மனக்கண் முன்னே கதை விரிகிறது.

சூழ்நிலைக்கைதியாகவும், ஆற்றாமையிலும், கண்முன்னே நடந்த அவலங்களை பார்த்தும் எதுவும் செய்யாது விட்ட ஆற்றாமையினாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதில் அரசு அதிகாரியாக இருந்தவர் பிரம்மா தத் படுகொலையில் பத்திரிகை செய்திகளை சேகரித்து காஷ்மீர கோப்புகளாக வைத்துள்ளார். அவரிடமிருந்து பல உண்மைகள், தத்துவங்கள் வெளிவருகின்றன. இஸ்லாமிய போலீசும், இஸ்லாமிய தலைவர் பரூக் அப்துல்லாவும் தீவிரவாதிகளுக்கு சாதகமாக நடந்துகொள்வது அதில் ஒன்று. தீவிரவாதி மாட்டினால், முஸ்லீம் அரசியல்வாதியின் மகள் கடததப்பட்டதாக நாடகமாடியாவது தீவிரவாதியை விடுவிக்கும் தொப்புள்கொடி உறவு, என பல தத்துவங்கள்.

மேலும் கதையை மறக்காமல் சினிமா அரங்கிற்குச் சென்று பார்க்கவும், உண்மையையும் பார்க்க விருப்பம் இருந்தால். காஷ்மீரக் கோப்புகளை கிருஷ்ணா பார்க்க நேருகிறதா? தேர்தலில் என்ன செய்கிறான்? என்பதெல்லாம் தெரிய வேண்டும் இல்லையா. நான் சொன்னது வெறும் கால்வாசி கதைதான்.

அனுபம் கேர் நன்றாக புஷ்கார்நாத் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிறருக்கு நடிப்பு நன்றாக இருந்தாலும் வேஷம், மேக்கப் – 30 வருடத்தைய மாற்றங்களைக் காண்பிப்பதாக இல்லை. பொதுவாகவே மும்பையை சேர்ந்த இஸ்லாமிய நடிகர்கள், தங்களுக்குப் பிடிக்காத நடிகர்களை கொலை செய்யக்கூடியவர்கள் ஆதலால் இதை நடிக்க ஆட்கள் கிடைத்ததே அதிகம்.


இந்த சினிமா வசனங்கள் மானமுள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். what you take home is this:

“ஏழ்மையினாலும், துன்புறுத்தப்பட்டதாலும் முஸ்லீம்கள் பயங்கரவாதி ஆனார்கள் என்றால், அதைவிட அதிகம் பட்ட காஷ்மீர ஹிந்துக்கள் ஒருவர்கூட ஏன் பயங்கரவாதி ஆகவில்லை?”

“பொய்யை ஏற்றுக்கொள்ள பயம் போதுமானது. உண்மையை ஏற்றுக்கொள்ள தைரியம் வேண்டும்”

“தீவிரவாதிகளில் பாதிபேர் போன தலைமுறையில் மதம் மாற்றப்பட்டவர்களின் மகன்கள்தான் – பாகிஸ்தானியர் அல்ல”

“பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டது உண்மையை எழுதியதற்கு அன்று. உண்மையை மறைத்ததற்கு”

வாசகர்கள் இந்த சினிமா பார்த்து, அவர்களுக்குப் பிடித்த வசனம் எது என கமெண்டில் எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்.


சினிமா முழுதும் படுகொலைகளைக் காட்டினாலும், நல்லவேளையாக கற்பழிப்பு, கணவனைக்கொன்று பின் மனைவியைக் கற்பழித்தல், மகள்களைக் கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு சென்ற நிகழ்ச்சிகள், ஹிந்துகணவனைக் கொன்று, மனைவியைக் கொன்றவனும், மகளை அவன் தம்பியும் நிக்காஹ் செய்துகொள்ளல் போன்ற நடந்தவை படமாக்கப் படவில்லை.

இந்தப் படத்தில் ஒரு குறை படுகொலைகளை மட்டுமே காண்பித்தது, பயங்கரவாதமே இல்லாமல் இனப்படுகொலை செய்ததை காண்பிக்காததுதான். அன்பாக நடித்தே கொலைசெய்வார்கள் என்பதையும் காட்டியிருக்கலாம். உதாரணத்துக்கு லவ் ஜிஹாத். அல்லது ஹிந்துக்கள் பேங்கில் போட்ட பணத்தைப் போலிக் கையெழுத்துப் போட்டு முஸ்லீம் மேனஜர் எடுத்துத் தீவிரவாதிகளிடம் கொடுத்தல், பள்ளியில் அன்பாகப் பேசி “எங்களில் ஜாதியில்லை. நான் தாழ்ந்த ஜாதி என்றுதானே என் காதலை நிராகரிக்கிறாய்? நீயே முடிவு செய்” என்று மணமாற்றுதல் etc . (இதை தமிழ்நாட்டில் ஹிந்துவாகவே இருப்பதாக கட்டிக்கொள்ளும் பிற ஜாதியினரும், கிறிஸ்தவர்களும் கூட செய்கிறார்கள்).

படம் பார்க்கப் பார்க்க “silence of the lambs ” என்ற வாக்கியம் என் மனதில் வந்து கொண்டே இருந்தது. இது பிராமணர்களிடம் உள்ள வியாதியாகவே கருதுகிறேன். அவர்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தாமல் “வெளியே தெரிந்தால் அசிங்கம்” என மூடி மறைக்கிறார்கள் – அது ஆபத்தையே வரவேற்கிறது. எதிரிகளுக்கு தைரியத்தையும், பிறருக்கு உதாசீனத்தையும் ஏற்படுத்துகிறது.

நிரம்பிய கொட்டகையில் சினிமா முடிந்து வெளிவந்தவர்கள் சிலர் தலை வலிப்பதாக சொன்னார்கள். எனக்கு சிலநாட்களாக “இப்படுகொலைகள் நடந்த சமயம் நானும் என்ன கிழித்துவிட்டேன்” என்ற குற்றவுணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த காஷ்மீரப் பாட்டி (2008) – கார்கில் ஜெய் முன்பு எழுதிய கட்டுரை.

Source link

Leave a Reply

Your email address will not be published.