கரௌலி கலவரம் – தமிழ்ஹிந்து


ராஜஸ்தானில் இந்து நாட்காட்டியின் கீழ் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாநிலத்தில் இந்துக்கள் விமரிசையாகக் நவசம்வத்ஸர் விழாவை கொண்டாடினர். “இந்து புத்தாண்டை முன்னிட்டு இந்து மதம் சார்ந்த அமைப்பினர் இருசக்கர வாகனத்தில் பேரணியை நடத்தினர்கள். அப்போது முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியான கரௌலி நகர் மசூதி அருகே இந்து அமைப்பினர் ஊர்வலமாக வந்தபோது, ஊர்வலத்தின் மீது முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பெரும் கலவரமாக மாறிய இந்தச் சம்பவத்தில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கலவரத்தின் பதற்றம் காரணமாக கரௌலி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரௌலியில் சாத்தியமான வன்முறை குறித்து முன்னரே எச்சரித்த கடிதத்தின் பின்னணியில் PFI இன் நோக்கம் மற்றும் பங்கு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டாலும், நிலைமையைத் தடுக்க கூடுதல் படைகளை அனுப்புவது போன்ற தேவையான நடவடிக்கைகளை ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் ஏன் செய்யத் தவறியது என்பது முக்கியமான விஷயம். சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க கரௌலியில் தற்போது சுமார் 1,200 போலீசார் பணியில் உள்ளனர் என்று ஷெகாவத் கூறினார். கரௌலி வகுப்புவாத வன்முறையில் PFI சதி வெளிப்பட்டது, என்பதை கூற ராஜஸ்தான் அரசு தயக்கம் காட்டுகிறது. இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சனிக்கிழமை (ஏப்ரல் 2) இந்து புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி கரௌலி மாவட்டத்தில் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி வழியாகச் சென்றபோது சுற்றுவட்டார வீடுகளின் மொட்டை மாடியில் இருந்து பேரணி மீது கற்கள் வீசப்பட்டதால் இந்த சம்பவம் உளவுத்துறையின் தோல்வி என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு டெல்லியில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு கலவரம் ஏற்பட்டதோ அதே போல் தற்போதும் நடந்துள்ளது. கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து தீ வைப்பு மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கரௌலியில் நடந்த வன்முறை குறித்து கெஹ்லாட் அரசுக்கு PFI முன்கூட்டியே கடிதம் எழுதியது! இந்து புத்தாண்டு ஷோபா யாத்திரையை குறிவைத்து வன்முறை நடக்கும் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? PFIக்கு தெரிந்த தகவல்கள் எப்படி ராஜஸ்தான் நிர்வாகத்திற்கு தெரியால் போனது? என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கரௌலியின் ஹத்வாரா பஜார் பகுதியில் வகுப்புவாத வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கல் வீச்சு சம்பவத்தின் முக்கிய சதிகாரராக காங்கிரஸ் கவுன்சிலர் மத்லூப் அகமது அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். ஏப்ரல் 2, 2022 அன்று நகரில் இந்து புத்தாண்டைக் கொண்டாடும் பைக் பேரணியின் மீது கல் வீசுதல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் கும்பலைத் தாக்கியதாக மத்லூப் அகமது மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , இந்த சம்பவத்தில் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், கரௌலியில் வெடித்த வகுப்புவாத மோதல்களில் தீவிர இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு (பிஎஃப்ஐ) பங்கு இருப்பதாகவும் , இது “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி” என்றும் பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் கூறின.

இந்து அமைப்பினர் நடத்திய பைக் பேரணி மசூதியைக் கடந்து சென்றதையும், கூரையில் இருந்து கற்களை வீசுவது போன்ற வன்முறைச் செயலையும் போலீசார் ஒப்புக்கொண்டனர். சுமார் 100 முதல் 150 பேர் வரை ஜிம்மிலிருந்து வெளியே வந்து தடியடி நடத்தியதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. ஆனால் கலவரம் நடத்தியவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி கூறவில்லை. தனியார் தொலைக்காட்சி கூரையிலிருந்து கல் வீச்சிய பட காட்சிகளை வெளியிட்டது, ஊர்வலம் மசூதி வழியாக சென்ற போது கலவரம் வெடிக்கவில்லை, மசூதிக்கு அருகில் உள்ள வீடுகளிலிருந்து கல் வீசித் தாக்குதல் நடத்திய பின்னர் தான் கலவரம் வெடித்தது , இந்துக்கள் நடத்திய ஊர்வலத்தினால் கலவரம் வெடிக்கவில்லை என்ற உண்மையை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது. கரௌலியில் நடந்த வகுப்புவாத மோதல்களின் பின்னணியில் காங்கிரஸ் கவுன்சிலர் முக்கிய சதிகாரராக அடையாளம் காணப்பட்ட பிறகு, கட்சியின் ராஜஸ்தான் பிரிவு இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கலவரம் நடந்ததது என்பதல்ல, நாடு முழுவதும் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதியில் இந்துக்களின் ஊர்வலத்திற்கு தடை கோருவதும், மேற்படி தடை விதிக்காவிட்டால் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்கின்றன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, இறுதியில் நடக்கும் விஜர்சன ஊர்வலத்தில் , திருவல்லிக்கேணி பகுதியில் ஊர்வலத்திற்கு தடை விதிப்பதும், பல இடங்களில் ஊர்வலத்தின் மீது கல்வீசுவதும் , இதற்கு ஆளும் கட்சியினர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசுவதும் நடைமுறையாகவே மாறிவிட்டது. இவர்களின் இந்த விபரீத போக்கு நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே துவங்கி விட்டது.

1930-ல் தமிழகத்தில் நான்கு இந்து முஸ்லீம் கலவரங்கள் நடந்துள்ளன.  சேலத்தில் ஒன்றும், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூரிலும் நிகழந்தது.   சேலத்தில் நடந்த  கலவரம்,  ஒரு இந்துவுக்கும், ஒரு முஸ்லீமுக்கும் நடந்த குஸ்திச் சண்டையின் விளைவாகும்.  இரண்டு தரப்பினரும் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டதாலும்,  இந்துக்கள் வெற்றி பெற்ற குஸ்தி வீரரை ஊர்வலமாக அழைத்து சென்ற போது,  எரிச்சலடைந்த முஸ்லீம்கள், ஊர்வலத்தில் வந்த இந்துக்கள் மீது கல்லெறிந்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள். .   சேலம் கிச்சிப்பாளையத்தில் இந்துத் திருவிழாவின்  போதும்  கலவரம் நடைபெற்றது,   1930 ஜீன் மாதம் 8ந் தேதி முஹாரம் திருவிழாவின்  இறுதிச்சடங்காக ஊர்வலம் ஆற்றுக்குப் போகும் வழியில் தொட்டபாளையம் கோவிலுக்கு முன்னால் முஸ்லீம்கள் இசைத்துக் கொண்டு சென்றதை இந்துக்கள் ஆட்சேபித்ததுதான் வேலூரில் நடந்த கலவரத்திற்கு காரணம்.  பாதி ஊர்வலம் கோவிலைக் கடந்த பிறகு ஒரு முஸ்லீம்  அசிங்கமான  செய்கையால்  கோவிலை  அவமானம் செய்ததாக ஒரு இந்து உரத்தக் குரலில் புகார் செய்ததால் கலவரம் மூண்டது. ( ஆதாரம் முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி  பக்கம் 97)  

முஸ்லீம்கள் வாழும் பகுதியில் எந்த ஊர்வலத்திற்கும் அனுமதிப்பதில்லை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, . 1930-ல் முகமது நபியின் பிறந்த நாளின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசவிருந்த கூட்டத்திற்கு போய் கொண்டிருந்த இந்துக்களுக்கும், அதே வழியில் இறைத்தூதரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முஸ்லீம் ஊர்வலமும் எதிர்பாரமால் சந்தித்திக் கொண்டதின் விளைவு கலவரம் ஏற்பட்டது. ( ஆதாரம் முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி பக்கம் 97) இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், முந்தைய ஆண்டுகளில் செய்தாற்போல் அந்த ஆண்டு இறைத்தூதரின் பிறந்தநாளில் இந்துக்கள் தங்கள் கடைகளை மூடாததால் கலவரத்திற்கு காரணம் என முஸ்லீம்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். ஆகவே முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லீம்களின் விழாக்களின் போது, இந்துக்கள் கடைகளை அடைக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும். இதே நிலைதான் தற்போது தமிழகத்தில், வானியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், மேல் விசாரம், ராமநாதபுரம், மேலப்பாளையம், கோவை, தேனி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.

கரௌலி வன்முறையில் இஸ்லாமியர்களின் கைகள் தெளிவாக வெளிப்பட்டாலும், இஸ்லாமியர்களின் அடிவருடிகள் முழுப் பிரச்சினையையும் திரித்து தங்கள் இந்து விரோதப் பிரச்சாரத்தை இயக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் ‘இந்துத்துவா’ வன்முறை பற்றிய போலியான கூற்றுகள் பரவி வருகின்றன. தில்லி இந்துக்களுக்கு எதிரான கலவரத்தைப் போலவே, கரௌலி வன்முறையும் இஸ்லாமியர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது இந்து புத்தாண்டையொட்டி நடந்த பைக் பேரணியின் போது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஆயுத கும்பலில் காங்கிரஸ் கூட்டணிக் கவுன்சிலர் மத்லூப் அகமது மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் அங்கம் வகித்தனர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வந்த உண்மையில், கலவரத்தில் கெலாட் அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பங்கையும் வீடியோ ஆதாரம் முழுமையாக வெளிப்படுத்துகிறது.

, ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கம், ‘கலவரத்தைத் தூண்டிவிட்டதாக’ பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி ராஜஸ்தான் பாஜக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர், காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த போதிலும் கூட கெலாட் அரசாங்கம் இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்ய கால தாமதம் செய்தது என எடுத்துக்காட்டுகிறார். “கரௌலி வன்முறை வழக்கில் மற்றொரு உண்மை வெளிப்பாட்டினை , ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் ஐந்து கிளிஞ்சர்களை ( Clinchers ) வெளியிட்டுள்ளது. இது ஏப்ரல் 2 அன்று வெடித்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை தெளிவாகக் குறிக்கிறது. மேலும், சமீபத்திய வீடியோக்கள் ராஜஸ்தானின் கரௌலியில் கலவரக்காரர்களின் இடைவிடாத வன்முறையைக் காட்டியது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர், இருப்பினும், காவல்துறையினரின் முன்னிலையில் குண்டர்கள் தடிகளுடன் ஓடி பல வாகனங்களை சேதப்படுத்துவதைக் காண முடிந்தது. இந்த சம்பவம் நடந்த உடனேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று ரிபப்ளிக் டிவியின் கிளிஞ்சர்கள் கூறியது.

31 வயதான ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மா தனது கைகளில் ஒரு குழந்தையுடன் தீப்பிடித்து எரிந்த கட்டிடங்களை கடந்தபோது ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றிய செய்தி அனைத்து வன்முறைகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது. பைக் பேரணி மசூதியை கடந்து சென்றபோது கற்களை வீசத் தொடங்கிய இஸ்லாமியர்களால் வன்முறை தொடங்கப்பட்டது என்பதை காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) உறுதிப்படுத்துகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, 100-150 பேர் ஜிம்மிலிருந்து வெளியே வந்து வன்முறை மற்றும் தீவைக்கத் தொடங்கினர். பேரணிக்கு ஒரு நாள் முன்னதாகவே கற்களை சேகரித்து மொட்டை மாடியில் வைத்து இஸ்லாமியர்கள் முன்கூட்டியே தயார் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

வன்முறை தொடங்கும் முன்பே முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டனர் என்பதை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வன்முறைக்குப் பிறகு இந்துக்கள் பாகுபாடுகளுக்கு ஆளாகியிருப்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதலில் தனது மூன்று கடைகளை இழந்த சந்திரசேகர் கர்க் கூறுகையில், தீயணைப்புப் படையினர் மூன்று முதல் நான்கு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் போது கூட முதலில் முஸ்லீம்களுக்கு உதவினார்கள் , ஆனால் இந்துக்களுக்கு உதவ முன்வரவில்லை.

“நாங்கள் எட்டு கடைகளை நடத்துகிறோம், மேற்படி கடைகள் முஸ்லிம்கள் நடத்தும் கடைகளுக்கு அருகில். இருக்கிறது. சுமார் 15:30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் ஒரு இடத்தில் கூடி, ஒரு பேரணியை நடத்தினர்கள். பேரணியின் போது, அவர்கள் எங்களை கடைகளில் இருந்து எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். என் தந்தையையும் சகோதரனையும் கோபமான கும்பல் கடைகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது, பின்னர் அவர்கள் முழு கடையையும் சூறையாடினர்”, கார்க் கூறியதாக OpIndia மேற்கோளிட்டுள்ளது.

வீடியோவை முழுமையாக ஆராய்ந்த பிறகு, வைரலான வீடியோவின் சில கிளிப்கள் ராஜஸ்தானின் கரௌலியில் இருந்து எடுத்தது கிடையாது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். பொய் பிரச்சாரத்தின் போது கூறப்படும் வீடியோவின் கிளிப் உ.பி., காஜிபூரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. காசிபூர் எஸ்பி ராம் பதன் சிங்கும் இந்த வீடியோ காசிபூரில் உள்ள கமர் கிராமத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், ராஜஸ்தானின் கரௌலி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அர்ஜுன் மெஹர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ கரௌலியைச் சேர்ந்தது அல்ல. மேலும் இது தொடர்பாக பொய்யான செய்தி மற்றும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கரௌலியில் நடந்த கலவரம் தற்போது கர்நாடாகவிலும் தொடர்கிறது. சிறுபான்மையினருக்கு சலுகை என்ற பெயரில் வாக்கு வங்கி அரசியல், தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கும், நல்லிணகத்திற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் அமைகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source link

Leave a Reply

Your email address will not be published.