ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?


சபரிமாலா என்ற “போராளி” அரசுப்பள்ளி ஆசிரியை மதம் மாறி ஃபாத்திமா ஆகிவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. “பெண்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை தேடி அலைந்தேன்.. குர் ஆன் ஹதீஸை படித்து மக்கள் எதிர்கொள்ளும் அத்தனை சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை இஸ்லாம் தெளிவாக 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை நான் அறிந்தேன். இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றேன்” என்று அவர் கொடுத்துள்ள “வாக்குமூலத்தை” இங்குள்ள இந்து விரோத திமுக கொத்தடிமை ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

“ஆமாம், இவர் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தான் பேசிக்கொண்டிருந்தார். இது பெரிய ஆச்சரியமாக்கும்..” என்று இதை அசட்டையாகவும் நக்கலுடனும் கடந்து செல்கிறார்கள் பல இந்து நண்பர்கள். இந்த மதமாற்ற செய்தி தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலம், அரபி, மலாய், மலையாளம் என்று பல மொழிகளில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய வெறியர்களால் விதவிதமாகப் பரப்பப் படுகிறது என்பதை இங்கு எத்தனை பேர் கவனித்தார்கள்? (Sabarimala என்று ஆங்கிலத்தில் தேடினாலே தெரியவரும்). ஒரு திண்டுக்கல் லோக்கல் பெண்ணின் மதமாற்றம் ஒரு trophy போல, வெற்றிக்கோப்பை போல உலகம் எங்கும் உள்ள இஸ்லாமிஸ்டுகளால் கொண்டாடப் படுகிறது என்றால், உங்களுக்கு அதிலிருந்து என்ன தெரிய வருகிறது? சிந்தியுங்கள்.

இந்த நபர் எப்படி இந்தப் புள்ளிக்கு வந்து சேர்ந்தார்? பள்ளிப் போட்டிகளுக்கான மேடைப்பேச்சு பயிற்சி, பட்டிமன்றம் என்று டாக்டர் அப்துல் கலாமின் மேற்கோள்களை வைத்து பேச ஆரம்பித்தவர் இவர். அடுத்த புள்ளியில் நீட் தேர்வு எதிர்ப்பு, முற்போக்கு இடதுசாரி அரசியல், மோதி அரசு எதிர்ப்பு, சி.ஏ.ஏ சட்ட எதிர்ப்பு என்று போய் இவருக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. அப்போதெல்லாம் பொட்டுவைத்த லட்சணமான கிராமிய முகத்துடன் துடியாகப் பேசிக்கொண்டிருந்த இந்தப் பெண் இப்போது ஒரு வெள்ளைக் கோணியில் உடம்பு முழுக்க மூடிக் கொண்டு சவக்களை தோய்ந்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார்.

உண்மையில் இது கேலிக்கும் அசட்டைக்கும் உரிய விஷயமல்ல, சீரியசான விஷயம். ஏதோ அரசியல் காரணத்திற்காக முஸ்லிம் ஆதரவு நிலை எடுக்கப் போனவர் படிப்படியாக groom செய்யப்பட்டு, மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, இஸ்லாம் என்னும் இருள் படுகுழியில் ஒரு தமிழ்ப்பெண் விழுந்திருக்கிறார் என்பது சகஜமான விஷயமல்ல, மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஒரு கட்டத்தில் மதம் மாறாவிட்டால் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்ற அளவுக்கான அழுத்தம் அவருக்குத் தரப்பட்டிருக்கலாம். யுவன் சங்கர் ராஜா, அப்துல்லாவாக ஆன பெரியார்தாசன் வரிசையில் இவர் சேர்ந்திருக்கிறார்.

இஸ்லாமிய ஜிகாதி கழுகுகளால் கொத்திச் செல்லப் படும் இத்தகைய ஆபத்தான நிலையிலுள்ளவர்களுக்கு அந்தக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பு தரும் அளவுக்கு காவல்துறையும் மற்ற இந்து சமூக அமைப்புகளும் இங்கு இல்லை. குறிப்பாக இளம் ஆண், பெண்களுக்கு இந்துத் தரப்பிலிருந்து சரியான counseling தரும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை. பக்கத்திலுள்ள கேரளத்தில் இதே பாணியில் சில நூறு இந்து இளம் ஆண்கள், பெண்கள் (கிறிஸ்தவர்களும் உண்டு) இத்தகைய அழுத்தங்களுக்குள் சென்று இஸ்லாமுக்கு மதம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியலையின் விளைவாக, அங்கு இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆர்ஷ வித்யா சமாஜம் என்ற அமைப்பு முழு நேரமாக இத்தகைய counseling பணிகளில் ஈடுப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடுதல், அவர்களது அனைத்துக் கேள்விகளுக்கும் அமைதியாக, நிதானமாக பதிலளித்தல், யோகம் தியானம் மூலம் அவர்களது மனதை அமைதிப் படுத்துதல் என்று பல வழிகளில் இது நடைபெறுகிறது. இதனை உருவாக்கி நடத்தி வரும் ஆசார்ய மனோஜ் அவர்கள் இந்துதர்ம நூல்களை மட்டுமின்றி, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நூல்களையும் நன்கு
கற்றறிந்தவர். இந்த அமைப்பின் மூலமாக இஸ்லாம், கிறிஸ்தவ மத மூளைச்சலவைகளில் இருந்து மீண்டு வந்தவர்கள் தங்களது அனுபவங்களை புத்தகங்களாகவே எழுதியுள்ளனவர். உதாரணமாக, ஓ.ஸ்ருதி எழுதியுள்ள “ஒரு பரிவர்த்தனத்தின்டெ கதா”. இது Story of Reversion என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தமிழிலும் வெளிவர வேண்டியது அவசியம்.

இத்தகைய ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதை உருவாக்க வேண்டியது மிக அவசியம் என்பதையே இந்தச் செய்தி உணர்த்துகிறது.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

Source link

Leave a Reply

Your email address will not be published.