கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள ஏதாவது காரணம் இருக்க முடியுமா? – மரியா வர்த்


ஆனாக், கிறிஸ்தவப் பழத்தைப் பிரிக்க முடியாது. பழத்தை முழுதாக உண்டால் மட்டுமே பலன் கிடைக்கும், என்ன பீட்டரே, அப்படித் தானே? என்ன செய்வது?

1980களில் கும்பமேளா சமயம் இந்தியாவிற்கு பயணியாக வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மரியா விர்த் (Maria Wirth), இந்து ஆன்மீகத்தால் முழுமையாக ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ ஆனந்தமயி மா, தேவராஹா பாபா ஆகிய குருமார்களின் சீடராகி அவர்கள் அருளுக்கும் அன்புக்கும் பாத்திரமானானர். யோகம் பயின்றார். இந்து தர்மத்தின் மேன்மை குறித்தும், இந்துப் பண்பாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் ஜெர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். Thank you India – a German woman’s journey to the wisdom of yoga என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். Is there a good reason to accept Christianity? என்ற அவரது சமீபத்திய பதிவை கள்ளப்பிரான் எஸ் ஐயங்கார் இயல்பான பேச்சுத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்காட்டா நிச்சயமாக ஒரு காரணமும் இருக்க முடியாது. அப்படியே பிறந்திருப்பினும், உங்களோட நம்பிக்கையின் சுய லாபங்களையும், பொது இடர்களையும் சீர் தூக்கிப் பாருங்க.

என்னையே எடுத்துக்குங்க. நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்துல பொறந்தவ. ஒரு குழந்தையா இருக்கும் போது, ‘கடவுள், நம்மைப் படைத்து, நம்மை அறிந்து அன்போடிருப்பவர்’, போன்ற நம்பிக்கைகள் அழகா இருந்திச்சு. சிறு வயசுல எங்கம்மை எனக்கு ஜெர்மன் மொழியில ஒரு சின்னப் பிரார்த்தனைப் பாட்டு ஒண்ணச் சொல்லிக் குடுத்தா:

‘கருணையுடையவரே, நான் சிறியவள்.
என் இதயம் தூய்மையானது,
என்னை என்றும் உம்முடையவளாக இருக்கச் செய்வீர்’.

இது கடவுள்ட்ட ஒரு நெருக்கத்தத் தந்ததோடு அவரோட வலுவான பாதுகாப்புல இருப்பதாவும் நம்புனேன்.

தொடர்ந்து ஏசுவே கடவுளின் ஒரே குழந்தை, நம் பாவங்களுக்காக உயிர் விட்டவர், மீண்டும் நமக்காக உயிர்த்தெழுந்தவர் என்றும் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. நரகம் பத்தின விஷயம் இதுல முக்கியமானது.

‘ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகலியா, பாதிரியார் கிட்டப் பாவமன்னிப்புக் கேக்கலியா, நீ நரகத்துக்குத் தான் போவே, அங்க உன்னை நிரந்தரத் தீக்குண்டத்துல நிரந்தரமாச் சாம்பல் ஆகாம எரிப்பாங்க…’ இந்த மாதிரி.

எனது இளம் வயதுக் காலமான 1950-60களில் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் போகாமல் இருப்பது கொடும்பாவம், ஸ்ட்ரெயிட்டா நரகத்துக்கு அக்ஸஸ் கார்டு வாங்கறா மாதிரி. தனி மனுசனுக்கு, ஏன்மனித குலத்துக்கே தீங்கான இப்படி ஒரு கோழைத்தனமான விஷயம் இருக்கறதா அப்ப நான் நம்பினேன், ஒரு கோழையா ஒடுங்கி, நறுங்கிக் கெடந்தேன்.

இதுக்கு நடுவுல ஸ்கூல்ல, ‘கிறிஸ்தவம் மட்டுமே உண்மை’ என்று அடுத்த பாட்டை ஆரம்பிச்சாச்சு. ‘ஏசுவை ஏத்துக்காத வேற்று ஜாதிகள் நிரந்தரமான நரகத்தின் நிரந்தரமான தீக்குண்டத்தில் நிரந்தரமா எரிஞ்சு சாம்பலாகாம நிரந்தரமா எரிஞ்சுக்கிட்டே இருப்பாங்க’.

இந்தப் பனிஷ்மென்ட் மனிதத் தன்மைக்கே எதிரானது. இதை ஏத்துக்கிட்டு நம்பற கிறிஸ்தவர்கள் அகராதி பிடிச்சு அலையாம என்ன செய்வாங்க? இவங்க ஜில்லுனு குளிர்ச்சியா இருக்கும் போது ஏத்துக்காத ஜாதியினர் எரிஞ்சு சித்ரவதைப் படுவாங்களாம். அதனால கருணை கூர்ந்து கிறிஸ்தவர்கள் அந்தப் பிற ஜாதியினரைக் கொல்லவும் கொல்லுவாங்களாம். கிறிஸ்தவம் சென்ற இடத்தில் எல்லாம் ரத்தக் காடாச்சு. கொடுமை, எல்லாம் அந்தக் கருணையின் பேரால நடந்தது தான்.

இப்படி ஒரு நம்பிக்கை ஒரு மதமா எப்படி இருக்க முடியும்? ஒரு வாத்துக்கு இருக்கற சூட்சுமம் உள்ளவன் கூட இது மனுசங்களப் பிரிச்சு அவர்களை அடிமையாக்கி, தாங்கள் கொழுக்கிறதுக்கான சதித் திட்டம்னு புரிஞ்சுக்க முடியும். ஆனாச் சின்ன வயசுலேயே கிறிஸ்தவத்துக்கு வசக்கப் பட்டவர்கள், வயசாகியும் வாத்துக்களைப் போலக்கூடப் பரிணாம வளர்ச்சி அடையல்ல.

கிறிஸ்தவத்தில ஒரு குறைந்தபட்ச சாதாரண “நன்மை” இருக்கு. நன்மைன்னா நம்ம வாழ வைக்கிற ஒரு சூப்பர் பவரை ஏத்துக்கறது. அதுக்காக ஒண்ணுக்கு ஒண்ணு ஃப்ரீன்னு இதுகூடப் பொட்டலமாக் கட்டி வர்ற கொடுமையான பொய்களையும் ஏத்துக்கணுமா? ஆனாக் கிறிஸ்தவப் பழத்தைப் பிரிக்க முடியாது. பழத்தை முழுதாக உண்டால் மட்டுமே பலன் கிடைக்கும், என்ன பீட்டரே அப்படித் தானே? என்ன செய்வது?

இந்தச் சர்வ வல்லமை வாய்ந்த சக்திங்கற தத்துவம் ஓக்கே. ஆனா இதுவும் கிறிஸ்தவம் வெளியில இருந்து சுட்ட பழம்தான். கிறிஸ்தவம் அப்டீன்னு ஒரு சொல்லு உருவாகப் பல யுகங்கள் முன்னால இருந்தே இருக்கற தத்துவம் அது.

காலத்தின் சுவடுகள் கூடத் தொட முடியாத தொன்மை வாய்ந்த வேதங்கள் இந்தச் சக்தியைப் பிரம்மம் என்று நிறுவுகின்றன. சத்-சித்-ஆனந்தம் என்று நிரந்தர இன்பத்தை அவை முன் வைக்கின்றன. இந்த ஆனந்தம் நிரம்பி வழிபவர்கள் நாம். நிரம்பி வழிபவையே அனைத்தும்! பெயர்கள், வடிவங்கள் மட்டுமே நிரந்தரமல்ல, வேறுவேறு. நிரந்தர நரகத்தின் பொசுங்கல் நாத்தத்துக்கும், பூமியிலேயே நிரம்பி வழியும் ஆனந்தத்துக்கும் தான் எவ்வளவு வேறுபாடு.

இந்தப் பிரம்மம்ங்கற நித்திய ஆனந்தத் தத்துவத்தச் சிதைச்சு ஒரு நித்தியப் பழிவாங்கும் கிறிஸ்தவக் கடவுளா ஆக்கி விட்டுட்டானுங்க. பிரம்மம் தானாகவும் தான் உருவாக்கியவற்றில் ஊடுருவியும் இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவக் கடவுள், தான் உருவாக்கியவற்றில் இருந்து தீட்டுப் படாம இருக்கணும்ணு எட்டடி தூர நிக்காரு. தன் புள்ள ஏசுவ ஏத்துக்கிட்டாச் சொர்க்கம், இல்லன்னா முறுகலா ரோஸ்ட்டிங் தான்.

இப்பச் சொல்லுங்க, எது உண்மைக்கு நெருக்கமானது, மனுசனுக்கு நன்மையானது: ஆனந்தப் பிரம்மமா, அகண்ட நரக நெருப்பா?

‘பிரபஞ்சமே மகிழ்ந்திருக்கட்டும், மேலான உண்மைகளை எங்களுக்குக் காட்டவும், இருளில் இருந்து ஒளியை நோக்கி எங்களை அழைத்துச் செல்வாய்’, போன்ற பிரார்த்தனைகள் சனாதன இந்து தர்மத்தில் இருப்பதில் ஆச்சர்யம்தான் என்ன.

இதுக்கு நேர் எதிராக் கிறிஸ்தவம் தங்களோட கிளப்புக்கு நைச்சியமா MLM-ல மெம்பர்ஷிப்பத் தலைல கட்டுது.

இந்தக் கருமத்தை எல்லாம் பாத்துட்டுத்தான் கிறிஸ்தவச்சியாப் பொறந்தாலும் சச்சிதானந்தமே உண்மைங்கறேன்.

ஹாங், இந்துக்கள் மதம் மாத்த மாட்டாங்க, ஆபிரகாமியர்களப் போல வெத்துக் கும்பலாப் பெருகுறதுல நம்பிக்கை இல்லாதவங்க. இந்த ஆபிரகாமியர்கள் மட்டும் இதே இந்து உணர்வோட இருந்துட்டா, ‘சொர்க்கம் பூமியிலயே அமைந்து விடும்’.

(கள்ளப்பிரான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

Source link

Leave a Reply

Your email address will not be published.