Comment on ம(மா)ரியம்மா – 4 by Saravanan 620012


கேரளாவின் சோக கதை
……………………………………………………………….

உண்மையில் கம்மியூனிசம் வெல்லலாம் …அதை அமல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் .

துரதிருஷ்டவசமாக உலகெங்கும் சோம்பேறிகளும், பொறாமை பிடித்தவர்களும்தான் கம்ம்யூனிஸ்ட்களாகிறார்கள் .இறுதில் தோல்வியைச் சந்திக்கிறார்கள் .

கேரளா அதற்க்கு விதிவிலக்கல்ல.

உலக உகழ்பெற்ற ,
நோபல் பரிசு பெற்ற
இந்திய பொருளாதாரமேதை அமர்த்தியா சென்
கொடிபிடித்த கம்மியூனிஸ்ட் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கிறது .

கேரளாவின் புகழ்பெற்ற பத்திரிகையான மாத்ருபூமி கேரள அரசாங்கம் எப்போதுவேண்டுமானாலும் திவாலாகலாம் ..இப்போதைக்கு அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கலாம் என்ற ப்ராப்போசல் இருப்பதாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது …

போக்குவரத்து துறை கேட்ட நிதியை தரமுடியாது என்று மாநில அரசு கையை விரித்துவிட்டதாம் .

தொந்திரவான மனநிலையுடன் ஊழியர்கள்
நிதி குறைவால் பராமரிப்பு குறைவான வாகனங்கள்..
மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பயணிக்கிறார்களாம்..

ஏன் இந்த நிலைமை?

நம்ம உச்சம் சொன்னதுதான்.

சிஸ்டம் சரி இல்லை .

நான் சொல்லவில்லை..கேரள அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.

அரசாங்க துறைகள்- மருத்துவமனைகள் உட்பட எதிலும் சரியான கண்காணிப்பு.. நிர்வாகம் இல்லை

பெரிய மருத்துவமனைகளுக்குக்கூட மக்கள் வர அஞ்சுகிறார்களாம் .

அத்தனை தவறான தகவல்கள் /
சிகிச்சை ..

மத்திய அரசாங்கம் கோவிட்டுக்காக கொடுத்த பணம் எங்கே போனதென்று தெரியவில்லை .செலவு அறிக்கை இல்லை.

இப்படிப்பட்ட மட்டமான நிலையால் மாநில அரசாங்கத்தின் கடன் லிமிட்டை உயர்த்த முடியாது என்று சொல்லிவிட்டது மத்திய அரசு .

கேட்ட ரொட்டின் அறிக்கைகளைக்கூட தரமுடியாமல் விழிக்கிறார் பினராய் விஜயன்.

சிஸ்டத்தை எப்படி சரி செய்ய?

பள்ளியில் படிக்கும்போது படிப்பு ஏறவில்லை…
சில பாடங்கள் புரியவில்லை என்றால் என்ன செய்வோம்?

வேறு நன்றாக படிக்கும் மாணவன் வீட்டுக்கு சென்று அவன் உதவியை நாடுவோமல்லவா ?

அதைத்தான் செய்திருக்கிறது கேரளா அரசாங்கம் .

போனமாதம் கேரளாவின் தலைமை செயலர் வி பி ஜாய் ,
இன்னொரு அதிகாரி உமேஷ்
இருவரும்

இந்தியாவின் சிறந்த முதல்வர்
சிறந்த மாநிலமான
தமிழகத்தைவிட்டு விட்டு

குஜராத் பயணமானார்கள் .
(இப்ப தெரிகிறதல்லவா உதார் வேறு உண்மை வேறு என்று!)

குஜராத் மாநில நிர்வாகம்
ஈ கவர்னஸ்
பற்றி தெரிந்து கொள்ள
மூன்றுநாள் விஜயம் செய்தனர் இருவரும் .

பயண முடிவில் கேரள தலைமை செயலர் சொன்னது :

” மிகுந்த திருப்தி.குஜராத்தில் சிஸ்டம்
சிறப்பாக நல்ல ரிசல்ட் கொடுக்கிறது .குஜராத் மாடல்..பின்பற்றவேண்டிய மாடல்.”

பாருங்கள் ..

குஜராத் மாடல் இந்துத்துவா பாசிச மாடல் என்றவர்கள் ..இப்ப அங்கே சென்று நிர்வாகம் தெரிந்துகொள்கிறார்கள்

முதலில் அமர்த்தியா சென்னின் நோபல் பரிசை திரும்ப வாங்க சொல்லணும் !

இந்த நிதி பிரச்னை
தகவல்கள் பரவ பரவ
கேரளா மக்கள் கொதிக்க தொடங்கி விட்டார்கள்

இஸ்லாமிய தீவிரவாதம்

வரி கொடாமல் ,வங்கிக்குவராமலே துபாய் பணத்தால் அவர்கள் வாங்கி குவித்த சொத்து இவைகளும்

பொருளாதாரத்தை தாக்கிய ஒரு பாக்டர் என்கிறார்கள் சில பொருளாதர வல்லுநர்கள் .

இலவச திட்டங்கள்..

தொழிலதிபர்களை எதிரிகளாக பார்த்ததால் தொழில்வளர்ச்சி குன்றல்

கூடுதலான காரணங்கள்.

கடவுளின் தேசம்

கஷடப்படுகிறது ..

” திவால் ஆகாது .சம்பளங்கள் குறைக்கப்படாது ” என்று கேரளா நிதி அமைச்சர் ஈனஸ்வரத்தில் அறிக்கை விட்டிருக்கிறார்..

ஆனால் அதே நிதி அமைச்சர் 25 லட்சத்துக்கு மேல் எந்த துறையும் பில் கொடுக்க கூடாது என்று கட் ஆப் கொடுத்து சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறார்.

இந்த இக்கட்டான நிலை நமக்கு சொல்வது என்ன தெரியுமா?

” தேசம் யாரைத் தொடரவேண்டும் ” என்று.

குஜராத்தும்

முன்பு அதை ஆண்டவரும்

காப்பாற்றுவார்கள்

என்று பினராய் நம்புகிறார் .

ராஜயோகி ஒருநாளும் ” நல்லவர்களை ” கைவிட்டதில்லைSource link

Leave a Reply

Your email address will not be published.