திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடுதமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010). இதன் ஆங்கிலப் பதிப்பு The Dravidian Maya என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த நூல் புத்தக வடிவம் பெறுவதற்கு முன் தமிழ்ஹிந்து இணையதளத்தில் தொடராக வெளிவந்தது என்பதை வாசகர்கள் அறிவார்கள்.

அண்ணாமலை ஜி சில நாட்கள் முன்பு ம.வெங்கடேசன் எழுதிய இந்துத்துவ அம்பேத்கர் நூலைப் பற்றி ஒரு விவாதத்தில் குறிப்பிட்டுப் பேசினார். அந்த நூல் வெளியீட்டு விழா தமிழ்ஹிந்து சார்பில் நடத்தப்பட்டது, அதனுடன் வெளியிடப்பட்ட ம.வெ.யின் மற்ற இரு நூல்களும் தமிழ்ஹிந்து தளத்தில் தொடர்களாக வந்தவை தான். ஒருவகையில், இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. அந்த இணையதளத்தின் ஆசியர் குழு உறுப்பினர் என்ற முறையில் இது எனக்கு மிகவும் பெருமிதம் அளிக்கிறது.

இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் அண்ணாமலை ஜி ஆற்றிய உரை அட்டகாசம். ஜெயகாந்தன், சோ ராமசாமி, நெல்லை ஜெபமணி போன்ற பழைய தலைமுறை பேச்சாளர்கள் இது குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் தான். ஆனால் இந்தத் தலைமுறையில், கடந்த 10 வருடங்களில், திராவிட அரசியலின் பொய்மைகளை, அபத்தங்களை, அசிங்கங்களை இவ்வளவு துல்லியமாக, அழுத்தமாக, அறிவுபூர்வமாக இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையில் தோலுரித்துக் காட்டுகின்ற தலைவர் என்றால் அண்ணாமலை ஜி தான். திராவிட அரசியல் வெங்காயத்தை லேயர் லேயராக உரித்துப் போட்ட அந்த உரை லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களிடம் போய்ச்சேர வேண்டும். பாஜக கட்சியும் தொண்டர்களும் அதைச்செய்வார்கள் என்று நம்புவோம்.

The Dravidian Maya (Part 1) புத்தகத்தை இங்கே வாங்கலாம் .

Source link

Leave a Reply

Your email address will not be published.