வெள்ளிக்கிழமை விபரீதங்கள் – தமிழ்ஹிந்து


உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே என்ன நடக்குமோ என்று அஞ்சியபடியே காலம் கடத்துகின்றன என்று சொன்னால், உங்களுக்கு வியப்பாக இருக்கக் கூடும். அது என்ன வெள்ளிக்கிழமை விபரீதம்?

அதுதான் அமைதி மார்க்கத்தின் மகிமை. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளோ, ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளோ, ஆப்பிரிக்க நாடுகளோ இவை எதுவுமே இதில் விலக்கில்லை. சொல்லப்போனால் அமைதி மார்க்கம் ஆளுகின்ற நாடுகளிலுள்ள மக்கள்தான் வெள்ளிக்கிழமை வந்தாலே குலை நடுங்குகிறார்கள்- எந்த மசூதியில் எப்போது குண்டு வெடிக்குமோ என்று!

பெயரில் தான் அமைதி இருக்கிறது. இஸ்லாம் மதத்தின் அடிப்படையிலேயே பிசகு இருப்பதால், ‘இஸ்லாம் என்றால் அமைதி’ என்று சொல்லி திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இஸ்லாமிய மதப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியே, இஸ்லாமியர் அல்லாதவரைக் கொல்ல வேண்டும் என்பதுதான். பிறகு எப்படி உலகில் அமைதி மலரும்?

இஸ்லாமியர்கள் அனைவரும் மதவெறியர்கள் அல்லர்; ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருக்கும் அனைவருமே உச்சபட்ச மதவெறியர்கள். நல்ல கோட்பாடுகள் அந்த மதத்தில் இல்லாமல் இல்லை; ஆனால் அவற்றை விட, ஜிஹாத்துக்குத் தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அந்தச் சமூகம், அடிப்படைவாதிகளை எதிர்க்கும் திராணியின்றி, சீர்திருத்த உணர்வின்றி முடங்கிக் கிடக்கிறது.

ஜிஹாத் என்பது வேறொன்றுமல்ல, காஃபிர்களை ஒழிக்கும் புனிதப் போர். காஃபிர்கள் யார் தெரியுமா? சிலை வணங்கிகளும், உருவ வழிபாட்டை மேற்கொள்வோரும், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றாதோரும். இப்போது இந்தப் புனிதப் போர் யாருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் – அவர்கள் சன்னிகளோ, ஷியாக்களோ, அகமதியாக்களோ, தங்கள் எதிரிகளை இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் உருவகித்து அவர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தி முடிந்த பிறகு – ‘தாருல் ஹரப்’ நாடாக இருந்த முந்தைய நாட்டை  ‘தாருல் இஸ்லாம்’ நாடாக தங்கள் நாட்டை மாற்றிய பிறகு – தங்களுக்குள் அடித்துக் கொள்(ல்)வார்கள். அகமதியாவை சன்னியும் ஷியாவும் சேர்ந்து விலக்குவார்கள்; வேட்டையாடுவார்கள். ஷியா மசூதியில் சன்னிகள் குண்டு வைப்பார்கள். இவை ஏற்கனவே, மத அடிப்படையில் இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடான  பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பவை. வெள்ளிக்கிழமை மகிமை புரிகிறதா?

பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும், பிரிட்டனிலும் நைஜீரியாவிலும், இந்தோனேசியாவிலும், பங்களாதேஷிலும் இதுவே நடைபெறுகிறது. சீனாவும் மியான்மரும் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் அங்கு சர்வாதிகார அரசுகள் இஸ்லாமியர்களை வேட்டையாடுகின்றன. (மியான்மரில் ரோஹிங்கியாக்களும் சீனாவில் உய்குர் முஸ்லிம்களும் எவ்வளவு பரிதாபமாக வாழ்கிறார்கள் என்று யாரேனும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு எடுத்துச் சொன்னால் நல்லது). அங்கு உண்மையாகவே அமைதி தவழ்கிறது.

இந்த நீண்ட பீடிகைக்கும், இந்தியாவில் தற்போது நடந்துவரும் முஸ்லிம்களின் திடீர்க் கிளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தொலைக்காட்சி விவாதத்தில் முன்வைத்த ஒரு வாதம் இன்று, நாடு முழுவதும் இஸ்லாமியர்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி நற்பெயரை ஈட்டியுள்ள நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் வைக்க இயலாத நிலையில் தத்தளித்து வரும் எதிர்க்கட்சிகளும், தங்கள் பங்கிற்கு இஸ்லாமியர்களுக்கு வெறியூட்டுகின்றன.

நூபுர் சர்மாவுக்கு எதிராக மும்பையில் தேசியவாத காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கடந்த ஜூன் 10ஆம் தேதி நாடு முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வெள்ளிக்கிழமைத் தொழுகை முடிந்தவுடன் நடத்தப்பட்டன. பல இடங்களில் கல்லெறி சம்பவங்கள்; போலீசாருடன் மோதல்கள். ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், கேரளம், ஜார்க்கண்ட் போன்ற முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த (எதிர்க்கட்சிகள் ஆளும்) மாநிலங்களில் தீவைப்பு, மக்கள் மீதும் கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  இந்த வன்முறையை நமது ஊடகங்கள் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கின்றன. (இதைக் கண்டித்து எந்த நடுநிலை நாதாரியும் தலையங்கம் தீட்டவில்லை. அச்சகத்தின் முன்பே பத்திரிகையை எரித்துவிடுவார்களே?) பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கும் கூட வன்முறை இல்லாமல் இல்லை. இதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை (ஜூன் 3) இந்த மதவெறியாட்டம் துவங்கியதே உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் தான். நூபுர் சர்மாவுக்கு எதிராக மசூதியில் முழங்கிய மௌலவிகளின் வெறியூட்டும் உரையைக் கேட்ட பிறகு, வெள்ளிக்கிழமைத் தொழுகை முடிந்து தெருக்களில் இறங்கிய இஸ்லாமியர்கள், கான்பூரில், குறிப்பாக பெக்கங்கஞ்  பகுதியில், கடைகளை அடைக்குமாறு மிரட்டினார்கள்; தெருக்களில் போவோர், வருவோரை எல்லாம் தாக்கினார்கள்; தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்லாமியர் அல்லாதோரின் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. திறந்திருந்த ஹிந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. அவர்களது எச்சரிக்கை வலுவானது: உங்கள் யோகி ஆளும் உ.பி.யிலேயே எங்கள் சக்தியைப் பாருங்கள் என்பதே அது.

ஆனால், மற்ற மாநிலங்களைப் போலல்ல உ.பி. சொல்லப்போனால், இந்தியாவில் அதிக முஸ்லிம் மக்கள் வாழும் மாநிலம் உ.பி. எனினும், அம்மாநில பாஜக அரசு சட்டத்தின் ஆட்சியை மிக விரைவில் நிலைநிறுத்தி இருக்கிறது. கண்காணிப்பு காமராவில் பதிவாகியிருந்த தெரு வன்முறையாளர்களின் படங்கள் சுவரொட்டியாக ஒட்டப்பட்டன. இன்று குற்றவாளிகள் தாமாகவே காவல் நிலையத்தில் சரணடைந்து, பிட்டம் சிவந்து கொண்டிருக்கிறார்கள். தெரு வன்முறைக் கும்பல்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகத் தெளிவாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்: சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை உண்டு.

இந்த விவகாரத்தின் ஆரம்பப் புள்ளி நூபுர் சர்மா என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. 2019இல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும், நாடு முழுவதும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்டன.  தேசப் பிரிவினையின்போது 1947இல் முஸ்லிம் லீகர்களாலும், அதற்கு முன், கேரளத்தின் மலப்புரம் வட்டாரத்தில் 1921இல் மாப்ளாக்களாலும் நடத்தப்பட்ட வன்முறைக் கதைகளைக் கேட்டால் அரண்டுபோவீர்கள். அவர்கள் அப்படித்தான்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட ஒட்டுமொத்த தேசமும் போராடியபோது முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கேட்ட கட்சி முஸ்லிம் லீக். அதன் தலைவர் முகமது அலி ஜின்னா 1946 ஜூலை 16ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தபோது, காந்தி, நேரு, படேல்  உள்ளிட்ட பலரும் ஏதோ ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்றுதான் எண்ணி வாளாயிருந்தார்கள். ஆனால், அன்றும் அதையடுத்த இரண்டு நாட்களிலும் கொல்கத்தாவிலும் வங்கப் பகுதிகளிலும் (அப்பகுதி முஸ்லிம் லீகின் ஆட்சியில் இருந்தது) ஆயிரக் கணக்கானோர் முஸ்லிம் அல்லாதவர் என்பதற்காகவே கொல்லப்பட்டார்கள். பிரிட்டிஷ் அரசே அதிர்ந்து போனது. பிரிவினையை ஏற்க மாட்டோம் என்று முழங்கி வந்த காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் லீக் முன்பு மண்டியிட்டது. இதுவே பாகிஸ்தான் உருவாக வித்திட்ட வன்முறை.

பிரிவினைக்குப் பிறகு மேற்கு பாகிஸ்தானிலும் கிழக்கு பாகிஸ்தானிலும் கொல்லப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்களின் எண்ணிக்கை பல லட்சம். அப்போது சொத்துக்களை இழந்து, மானம் இழந்து, குடும்ப உறுப்பினர்களை இழந்து உயிர்த் தப்பி அகதிகளாக ஓடி வந்தவர்களின் கண்ணீர்க் கதைகள் சரித்திரத்தில் பதிவாகி இருக்கின்றன. வன்முறை வெறியாட்டம் என்பது இஸ்லாமியர்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும் குணம் என்பதற்காகத் தான் இந்த சரித்திர நினைவூட்டல்.

இதனை அறியாதோர் அல்ல காங்கிரஸ்,கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். அவர்களுக்கு வாக்கு வங்கியாக முஸ்லிம்கள் இருப்பதால் அவர்களது வன்முறையைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பது ஒருபாதி மட்டுமே உண்மை; அவர்களும் அச்சத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கும் துணிவின்றி, பாஜக மீது பழி கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

2022 மே 27இல்  ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பான விவாதத்தில்,  எதிர்த்தரப்பில் பங்கேற்ற முஸ்லிம் ஒருவர் சிவலிங்கத்தை ஆபாசமாகப் பேசியபோது, அதற்குப் பதிலடியாக நூபுர் சர்மா ஒரே கேள்விதான் கேட்டார். ஒட்டுமொத்த இஸ்லாமிய அகிலமும் ஒன்று திரண்டுவிட்டது. இஸ்லாமியர்களின் புனித நம்பிக்கைக்குரிய இறைத்தூதரான முகமது நபி குறித்து, இஸ்லாமிய மார்க்க நூலான ஹதீஸில் குறிப்பிட்டுள்ள சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரே கேள்வியை எழுப்பினார் நூபுர் சர்மா. (அதை இங்கே எழுதக் கூசுகிறது; ஆனால் அது ஹதீஸில் இருக்கிறது).

அப்போது இது பெரிய விஷயமாகவில்லை. ஒரு வாரம் கழித்து – வெளிநாடு வாழ் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களின் தயவால் – இது பிரமாண்ட வடிவம் பெற்று, இந்தியாவில் இஸ்லாம் மதம் களங்கப்படுத்தப்படுவதாக உலகம் முழுவதிலும் இஸ்லாமிய நாடுகள் ஓலமிடத் துவங்கின.

உலகளாவிய கண்டனங்களை அடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவும், தில்லி மாநில பிரசார அணி நிர்வாகி நவீன்குமார் ஜிண்டாலும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நீக்கத்துக்கு முஸ்லிம்களின் கண்டனம் ஒரு காரணம் என்றாலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசின் ஆட்சியை நடத்தும் கட்சி பாஜக என்பதை அவர்கள் மறந்ததுதான் காரணம் என்று கூறத் தோன்றுகிறது. தெருநாய் கடிக்கிறது என்பதற்காக அந்த நாயைத் திருப்பிக் கடிக்க கூடாது. மனிதருக்கும் நாய்க்கும் வித்தியாசம் உண்டு; அதனைக் கல்லால் எறித்து விரட்ட மட்டுமே செய்ய வேண்டும் என்பது நூபுர் சர்மா விவகாரம் உணர்த்தும் பாடம்.

இந்த விஷயத்தில் எண்ணெய் வளம் மிக்க வளகுடா நாடுகள் கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (இதில் 57 நாடுகள் உள்ளன) ஆகியவை, இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததும், அதை மோடி அரசு நேர்த்தியாகக் கையாண்டு நீர்க்கச் செய்தது. அல்குவைதா தற்கொலை குண்டு மிரட்டல் விடுத்தபோதும், இந்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. எனவேதான், ஜூன் 10இல் தெருவில் இறங்கி வன்முறை வெறியாட்டத்தை அமைதி மார்க்க சகோதரர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் இத்துடன் நிற்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியர்களின் இந்த அணிசேர்க்கையும் அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதும், நாட்டு மக்களை இருதுருவமாக்குவதில் தான் முடியப்போகிறது என்பதையோ, அது பாஜகவுக்கே அனுகூலம் என்பதையோ அறியாத முட்டாள்கள் அல்ல அவர்கள். அவர்கள் இப்போது ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

மேற்குவங்க மாநிலம், ஹௌராவில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டம்.

உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடு இந்தியா. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு வாழும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17.72 கோடியாகும். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் (140 கோடி) சுமார் 15 % கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தவிர, அண்டை நாடுகளான பங்களாதேஷிலிருந்தும் மியான்மரிலிருந்தும் ஊடுருவி வந்திருக்கும் கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தனிக் கணக்கு.

தங்கள் மக்கள்தொகை அதிகரித்திருப்பதை இஸ்லாமிய மதத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எனவேதான் மிரட்டல் அரசியலுக்கு அவர்கள் துணிந்துவிட்டார்கள். 2040இல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என்று வெளிப்படையாகவே பிஎஃப்ஐ அமைப்பு சுவரொட்டி ஒட்டுகிறது. சென்ற ஆண்டு மேற்கு வங்க மாநிலத் தேர்தல் முடிவுகளை அடுத்து, மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் ஹிந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள்; பலர் கொல்லப்பட்டார்கள். அங்கு அன்று நடந்தது, நாளை இந்தியாவில் எங்கு வேண்டுமாயினும் நடக்கலாம். நமது தலைவர்கள் அப்போதும் சகிப்புத் தன்மை, மதச்சார்பின்மை பேசிக் கொண்டிருப்பார்களா?

”ஒரே ஒரு மணி நேரம் உங்கள் ராணுவத்தையும் போலீஸையும் கைகட்டிக்கொண்டிருக்கச் சொல்லுங்கள், இந்த நாட்டில் உள்ள ஹிந்துக்கள்  அனைவரையும் சிறுபான்மையினராக்கி விடுகிறோம்” என்று சொன்ன ஏஐஎம்எம் கட்சியின் தலைவரை (சொல்லி இரு ஆண்டுகள் ஆகின்றன) நமது அரசுகள் என்ன செய்தன? தொலைக்காட்சி விவாதத்தில் சிவலிங்கத்தை கேவலமாகப் பேசிய இஸ்லாமியரை எந்த ஓர் ஊடகமாவது இதுவரை கண்டித்ததா? இந்த இரண்டுமே சாத்தியமில்லை என்பதே இன்றைய நிதர்சனம்.

ஏனெனில், மற்றொரு நேரடி நடவடிக்கைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தயாராகி வருகிறார்கள். நாடு முழுவதிலும் ஆங்காங்கே என்.ஐ.ஏ நடத்திவரும் சோதனைகளில் கிடைக்கும் தகவல்கள் வெளிப்படுத்துவது இதுவே. இந்த நேரடி நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செய்து வருகிறது. அதற்கான நிதியுதவி   இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருகிறது. அந்த வகையில் பிஎஃப்ஐயின் சுமார் 45 வங்கிக் கணக்குகளை இந்திய அரசு முடக்கி இருக்கிறது. இதுவே இஸ்லாமிய நாடுகளின் திடீர்க் கொந்தளிப்பிற்குப் பின்புலம் என்று உளவுத் தகவல்கள் கூறுகின்றன. தவிர, கச்சா எண்ணெய்க் கொள்முதலில் இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யத் துவங்கி இருப்பதும், அந்த  நாடுகளின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

இந்த நூபுர் சர்மா விவகாரம் நடந்ததும் நல்லதற்கே. பெருங்கடலில் தென்படும் சிறிய பனிப்பாறை முகடுகளை நெருங்கும்போதுதான் அவை கப்பலையே உடைக்கும் பெரும் பாளங்கள் என்பது தெரிய வரும். நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்தால், இந்திய சமூகம் என்ற கடலுக்கடியில் காத்திருக்கும் கும்பல் வன்முறை ஆபத்துகளை முன்கூட்டியே அறிய இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வன்முறை நிகழ்வுகளின் மூலம், ஆபத்தான எதிர்காலம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் காசி விஸ்வேஸ்வரருக்கு நன்றி.

Source link

Leave a Reply

Your email address will not be published.