தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன் – தமிழ்ஹிந்து


பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. அவருக்கு அனுப்பி வைத்தேன். கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. மகா தபஸ்வியான சுவாமிகள் பீடாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் பரவலாக சஞ்சாரம் செய்து தனது அருள்மழையைப் பொழிந்துள்ளார். அவரது அனுக்ரஹம் பெற்ற சீடர்களில் சில மகான்கள் தாமே குருபீடங்களாகவும் விளங்கியுள்ளனர். அவர் இயற்றிய அற்புதமான ஸ்தோத்திரங்கள் பக்தி ஸுதா தரங்கிணி என்ற பெயரில் தொகுக்கப் பட்டுள்ளன.

அண்மையில் 2012ல் தற்போதைய மகாசன்னிதானம் ஸ்ரீ பாரதிதீர்த்த சுவாமிகள் பழனிக்கு விஜயம் செய்தார். தண்டாயுதபாணி சுவாமிக்கு தம் திருக்கரங்களால் பூஜை செய்தார். அத்தருணத்தில் அவரது தமிழ் அருளுரை இங்கே.

பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. இது குறித்து பழனி ஸ்தானிகர் ஸ்ரீ செல்வ சுப்பிரமணிய குருக்கள் இங்கு நினைவு கூர்கிறார்.


தண்டபாணி பஞ்சரத்னம்

இசை வடிவில் யூட்யூபில் இங்கு கேட்கலாம்.

சண்ட³-பாப-ஹர-பாத³ஸேவநம்ʼ
க³ண்ட³-ஶோபி⁴-வர-குண்ட³ல-த்³வயம் ।
த³ண்டி³தாகி²ல-ஸுராரி-மண்ட³லம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 1॥

பாதத்தில் சேவிக்கும் பக்தர்களின் கொடிய பாவங்களை அழிப்பவர். கன்னங்களின் ஓரத்தில் அழகுறும் குண்டலங்கள் அணிந்தவர். அரக்கர் கூட்டங்களை தண்டித்து அடக்குபவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

காலகால-தநுஜம்ʼ க்ருʼபாலயம்ʼ
பா³லசந்த்³ர-விலஸஜ்ஜடாத⁴ரம் ।
சேலதூ⁴த-ஶிஶுவாஸரேஶ்வரம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 2॥

காலகாலரான சிவனாரின் குமாரர். கருணைக்கடல். இளம்பிறை திகழும் சடையணிந்தவர் (சிவஸ்வரூபம்). இளஞ்சூரியனின் செவ்வொளியை வெல்லும் ஆடையணிந்தவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

தாரகேஶ-ஸத்³ருʼஶாநநோஜ்ஜ்வலம்ʼ
தாரகாரிமகி²லார்த²த³ம்ʼ ஜவாத் ।
தாரகம்ʼ நிரவதே⁴ர்ப⁴வாம்பு³தே⁴ர்-
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 3॥

நிலவு போன்று ஒளிரும் முகமுடையவர். தாரகனை அழித்தவர். அனைத்து வேண்டுதல்களையும் உடனடியாக அருள்பவர். கரைகாணாப் பிறவிக் கடலில் இருந்து கடைத்தேற்றுபவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

தாபஹாரி-நிஜபாத³-ஸம்ʼஸ்துதிம்ʼ
கோப-காம-முக²-வைரி-வாரகம் ।
ப்ராபகம்ʼ நிஜபத³ஸ்ய ஸத்வரம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 4॥

பாதத்தை துதிப்பவர்களின் தாபங்களை அகற்றுபவர். காமம் குரோதம் முதலான பகைகளை நீக்குபவர். தனது பதத்தை விரைவில் அடைய அருள் செய்பவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

காமநீயக-விநிர்ஜிதாங்க³ஜம்ʼ
ராம-லக்ஷ்மண-கராம்பு³ஜார்சிதம் ।
கோமலாங்க³மதிஸுந்த³ராக்ருʼதிம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 5॥

மன்மதனை வெல்லும் அழகர். ராமலக்ஷ்மணர்களின் திருக்கரங்களால் அர்ச்சிக்கப் பெற்றவர் (இது பழனி ஸ்தலபுராணம்). மென்மையும் எழிலும் கொண்ட திருமேனியுடையவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

தேவநாகரி லிபியில்:

॥ श्रीदण्डपाणिपञ्चरत्नम् ॥

चण्डपापहरपादसेवनं गण्डशोभिवरकुण्डलद्वयम् ।
दण्डिताखिलसुरारिमण्डलं दण्डपाणिमनिशं विभावये ॥ १॥

कालकालतनुजं कृपालयं बालचन्द्रविलसज्जटाधरम् ।
चेलधूतशिशुवासरेश्वरं दण्डपाणिमनिशं विभावये ॥ २॥

तारकेशसदृशाननोज्ज्वलं तारकारिमखिलार्थदं जवात् ।
तारकं निरवधेर्भवाम्बुधेर्दण्डपाणिमनिशं विभावये ॥ ३॥

तापहारिनिजपादसंस्तुतिं कोपकाममुखवैरिवारकम् ।
प्रापकं निजपदस्य सत्वरं दण्डपाणिमनिशं विभावये ॥ ४॥

कामनीयकविनिर्जिताङ्गजं रामलक्ष्मणकराम्बुजार्चितम् ।
कोमलाङ्गमतिसुन्दराकृतिं दण्डपाणिमनिशं विभावये ॥ ५॥

इति श‍ृङ्गेरि श्रीजगद्गुरु श्रीसच्चिदानन्द-शिवाभिनव-नृसिंहभारती-स्वामिभिः विरचितं श्रीदण्डपाणिपञ्चरत्नं सम्पूर्णम् ।

Source link

Leave a Reply

Your email address will not be published.