அவர்கள் ஏன் நரேந்திர மோதியை வெறுக்கிறார்கள்?


சிலர் சொல்கிறார்கள்: உங்களுக்கு இந்த அரசாங்கத்தை பிடிக்காமல் இருக்கலாம். உங்களுக்கு நரேந்திர மோதியை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியாவின் மீது காட்டாதீர்கள்.

அது அவ்வாறு இல்லை ஐயா.

பாரத தேசத்தின் மீதான அவர்களின் வெறுப்புக்கு காரணம் அவர்கள் நரேந்திர மோதியின் மீது கொண்டுள்ள வெறுப்பு என்பது தவறு.

அவர்கள் நரேந்திர தாமோதரதாஸ் மோதியை வெறுப்பதற்கு காரணம் அவர்களுக்கு பாரதத்தின் மீது இருக்கும் ஆழமான வெறுப்பு.

அவர்கள் பாரதத்தை வெறுக்கிறார்கள். ஏனென்றால் அது இன்னமும் இந்துக்கள் அதிகம் வாழும் தேசம். இன்னும் முக்கியமாக அது ஹிந்து பண்பாட்டுடன் வாழும் தேசம். அது பண்பாட்டு அடிமைத்தனம் இல்லாமல் ஆன்மிக அடிமையாக மாறாமல் வாழும் தேசம். எனவே அவர்கள் பாரதத்தை வெறுக்கிறார்கள்.

பாரதம் விக்கிரக வழிபாடு இன்னமும் நிலவும் தேசம். அப்படிப்பட்ட தேசம் மேற்கத்திய நாடுகளிடம் மண்டியிட்டு நிற்க வேண்டும். அப்படிப்பட்ட தேசம் என்றுமே தோற்கடிக்கப்படும் தேசமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தேசம் என்றுமே குறைபாடுகளுள்ள தேசமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தேசம் என்றுமே ஆறாத காயங்களுடனும் வலியுடனும் வேதனையுடனும் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட பாரதத்திடம் அவர்கள் கருணை காட்டுவார்கள். தங்கள் தயாள மனதைக் காட்டும் ஒரு பரிதாபத்துக்குரிய தேசமாக இந்தியா இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

எனவே கோவிட்-19 பெருந்தொற்று வந்த போது இந்தியா தடுப்பூசி தயாரிக்க முடியாமல் மேற்கத்திய நாடுகளின் கருணையை எதிர்பார்த்து மண்டியிட்டு இருந்திருக்க வேண்டும். அதை அவர்கள் எதிர்பார்த்தார்கள். மாறாக நரேந்திர தாமோதரதாஸ் மோதியின் பாரதம் சுதேச தடுப்பூசியை உருவாக்கியது. அதை வெற்றிகரமாக பெருமளவு உற்பத்தி செய்தது. இன்று இருநூறு கோடி தடுப்பூசிகள் போடப்பட்ட தேசமாக பாரதம் விளங்குகிறது.

இந்த சாதனையின் பாரதத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். எனவே இந்த சாதனைக்கு தேசிய தலைமையேற்ற நரேந்திர மோதியை அவர்கள் வெறுக்கிறார்கள்.

அவர்கள் ஸ்வச் பாரதத்தை வெறுக்கிறார்கள். அதன் மூலை முடுக்குகளில் தோண்டி அத்திட்டத்தில் குறைகளைக் கண்டுபிடித்து அல்லது ஊதி பெருக்கி அதனை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் அதைத் தாண்டியும் ஸ்வச் பாரதம் பெரிய வெற்றியாக இருப்பதால் அதனை நடத்தி காட்டிய நரேந்திரமோதியை அவர்கள் வெறுக்கிறார்கள். அவர்களுக்கு பாரதம் அழுக்காக இருக்க வேண்டும். திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் இந்தியர்களைக் கொண்டு தங்கள் நாகரிக மேன்மையை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு தூய்மையான பாரதம் எனும் செயல்திட்டமே ஒரு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனவே அவர்கள் மோதியை வெறுக்கிறார்கள்.

பாரதத்தின் கிராமத்து பெண்கள் எரிவாயு கொண்டு சமையல் செய்வதை அவர்கள் வெறுக்கிறார்கள். புகை சூழ்ந்த சமையலறையில் இந்திய பெண்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு அந்த நிலை குறித்து பல்கலை கழக செமினார்களில் பரிதாபப்பட்டு ஆராய்ச்சி கட்டுரைகள் வாசித்து பிரகாசிக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதை இல்லாமலாக்கும் நரேந்திர மோதியின் உஜ்வல் யோஜனா உத்திரபிரதேச கிராமங்களின் பின்தங்கிய பகுதிகளிலும் செயல்படுத்த படுவதால் மோதியை அவர்கள் வெறுக்கிறார்கள்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஆரோக்கியமான நல்ல குடிநீர் கொடுக்கும் நரேந்திர மோதியின் ஜல ஜீவன் திட்டத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். ஏனெனில் மோசமான ஆரோக்கியமற்ற குடிநீரால் நோய்வாய்ப்படும் இந்தியாவே அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது.

ஆம். அவர்கள் நரேந்திர தாமோதரதாஸ் மோதியை பாரதத்தின் வெற்றிகளுக்காக பாரதத்தின் சாதனைகளுக்காக வெறுக்கிறார்கள். பாரதம் வளமும் வலிமையும் கொண்ட நாடாக விளங்குவதற்காக வெறுக்கிறார்கள்.

பாரத தேசத்தின் மீதான வெறுப்பே
பாரதத்தின் வெற்றிகளின் மீதான வெறுப்பே
பாரதத்தின் சாதனைகளின் மீதான வெறுப்பே
பாரதத்தின் ஒற்றுமையின் மீதான வெறுப்பே
நரேந்திரமோதியின் மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது.

இதை தலைகீழாக புரிந்து கொள்ளாதீர்கள்.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

Source link

Leave a Reply

Your email address will not be published.